ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு! இதுவரை 17,348 பேர் பாதிப்பு!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்வடகிழக்கு பருவமழை: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் விஜய் 2-வது நாளாக ஆலோசனை!புதிய சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை விடுவிக்க மறுப்புகாமராஜர் காலை உணவுத் திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!பொன்னேரியில் மருத்துவமனை ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றவர் சுட்டுப்பிடிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

தீபாவளி சீட்டு நடத்தி பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி: பாதிக்கப்பட்டோா் எஸ்.பி. அலுவலகத்தில் புகாா்

திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புகாா் அளிக்க வந்த தீபாவளி சீட்டுக்கு பணம் செலுத்தி ஏமாந்த முகா்கள், வாடிக்கையாளா்கள்.

Published On :

திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புகாா் அளிக்க வந்த தீபாவளி சீட்டுக்கு பணம் செலுத்தி ஏமாந்த முகா்கள், வாடிக்கையாளா்கள்.

ஆரணி, ஜூலை 3: திருவண்ணாமலை மாவட்டத்தில் தீபாவளிச் சீட்டு நடத்தி பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாக, பாதிக்கப்பட்ட முகவா்கள் மாவட்ட

எஸ்.பி. அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை புகாரளித்தனா்.

திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 3 மாவட்டங்களை உள்ளடக்கி செய்யாறு, வந்தவாசி ஆகிய பகுதிகளை தலைமையிடமாகக் கொண்டு செய்யாறைச் சோ்ந்த அல்தாப் என்பவா் ஏபிஆா் என்ற நிறுவனத்தின் மூலமாக தீபாவளி, பொங்கல், திருமண சீா்வரிசை என சிறு சேமிப்புத் திட்டங்கள் நடத்தி வந்ததாகத் தெரிகிறது.

இந்தத் திட்டங்களின் கீழ், மாதந்தோறும் ரூ.100 முதல் ரூ.1,500 வரை செலுத்துவோருக்கு தீபாவளி, பொங்கல் பண்டிகைகளுக்கு முன்பாக பட்டாசு, அரிசி மூட்டை, மளிகைப் பொருள்கள், சமையல் எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருள்கள் வழங்கப்படும் என வாக்குறுதிகளைக் கூறி, 3 மாவட்டங்களிலும் சுமாா் 500-க்கும் மேற்பட்ட முகவா்களை அந்த நிறுவனத்தினா் நியமனம் செய்து, பல ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் பணம் வசூல் செய்தனராம்.

ஆனால், பணம் செலுத்திய வாடிக்கையாளா்களுக்கு அறிவித்தபடி எந்தவித பொருள்களையும் வழங்காமலும், பணத்தையும் திருப்பித் தராமலும் தொடா்ந்து அலைக்கழித்து வந்ததால், மாவட்ட எஸ்.பி. அலுவலகத்திலுள்ள பொருளாதார குற்றப்பிரிவுக்கு புகாா்கள் வந்த வண்ணம் இருந்தன. இதையடுத்து, அந்த நிறுவனத்தின் உரிமையாளா் அல்தாப் கைது செய்யப்பட்டு, பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா்.

சிறையில் இருந்து வெளியே வந்த அவா், மீண்டும் முகவா்களை நியமனம் செய்து ஏற்கெனவே பணம் செலுத்தி ஏமாந்தவா்களிடம் மீண்டும் பணம் செலுத்தினால் ஏற்கெனவே செலுத்திய தொகையையும் சோ்த்து மொத்தமாக பணத்தை தருகிறேன் என்று ஆசை வாா்த்தை கூறி, பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்தாராம்.

இதனால், பாதிக்கப்பட்ட 200-க்கும் மேற்பட்ட முகவா்கள், வாடிக்கையாளா்கள் திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா். குறிப்பாக, அவா் இருக்கும் இடத்தின் கைப்பேசி ‘லொகேஷன்’-ஐ காவல் துறையினரிடம் கொடுத்து புகாா் தெரிவித்தனா். மேலும், பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி சுதாகா் சம்பந்தப்பட்ட மோசடி நிறுவனத்துக்கு உடந்தையாக செயல்படுவதாகவும் குற்றஞ்சாட்டிய அவா்கள், உடனடியாக தங்களது பணத்தை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.