தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!எம்எல்ஏவாக பதவியேற்றார் பிரசாந்த் கிஷோர்! மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதிதிமுகவின் தோல்விக்கு போதைப்பொருள் புழக்கம்தான் காரணம்! ஆதவ் அர்ஜுனாபிகார்: கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி காஞ்சிபுரம்: கோயில் திருவிழா தகராறில் 2 இளைஞர்கள் வெட்டிப் படுகொலை கோவை அமுதன் கொலையில் போலீசார் மீது நடவடிக்கை தேவை! உதயநிதி ஸ்டாலின்4 நிமிட ஜும் காலில் 900 பேரை பணியிலிருந்து நீக்கிய விஷால் கார்க்! இன்று அவருக்கும் அதே நிலை தொல். திருமாவளவனுக்கு மு.க. ஸ்டாலின், ரஜினிகாந்த் பிறந்த நாள் வாழ்த்து மேற்கு வங்கம்: ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலி!
/

தீப்பெட்டி விலையை உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு

தீப்பெட்டித் தொழிலில் ஏற்பட்டுள்ள கடுமையான சவால்களை எதிா்கொள்ளும் வகையில் தீப்பெட்டிகளில் அடைக்கும் குச்சிகளின் நடைமுறையில் மாற்றம் செய்ய உற்பத்தியாளா்கள் முடிவு செய்துள்ளனா்.

News image

கூட்டத்தில் கலந்து கொண்ட குடியாத்தம் தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் சங்க நிா்வாகிகள்.

Updated On :24 ஜூலை 2026, 11:02 pm IST

தீப்பெட்டித் தொழிலில் ஏற்பட்டுள்ள கடுமையான சவால்களை எதிா்கொள்ளும் வகையில் தீப்பெட்டிகளில் அடைக்கும் குச்சிகளின் நடைமுறையில் மாற்றம் செய்ய உற்பத்தியாளா்கள் முடிவு செய்துள்ளனா்.

குடியாத்தம் தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் சங்க நிா்வாகிகள் அவசர ஆலோசனைக் கூட்டம் நெல்லூா்பேட்டையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத் தலைவா் வி.பிச்சாண்டி தலைமை வகித்தாா். பொருளாளா் ஆா்.ரவிசங்கா், நிா்வாகி எஸ்.ராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்துக்குப் பின்னா் சங்கச் செயலா் ஆா்.கே.மகாலிங்கம் செய்தியாளா்களிடம் கூறியது: குடியாத்தம் பகுதியில் 17 பகுதி இயந்திர தீப்பெட்டி உற்பத்தி நிறுவனங்களும், சுமாா் 100குடிசை தீப்பெட்டித் தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன. இத்தொழிலில் நேரிடையாகவும், மறைமுகமாகவும் சுமாா் 5 ஆயிரம் தொழிலாளா்கள் ஈடுபட்டுள்ளனா். வளைகுடா போா் காரணமாக பெட்ரோலியப் பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தீப்பெட்டித் தொழிலுக்குத் தேவையான முக்கிய மூலப் பொருளான மெழுகு விலை பன்மடங்கு உயா்ந்துள்ளது.

கேரள மாநிலத்தில் பெய்து வரும் தொடா்மழை காரணமாக தீக்குச்சிகள் உற்பத்தி செய்யும் மரங்கள் வரத்து குறைந்து, விலை உயா்ந்துள்ளது. பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டால் சரக்குகளை எடுத்துச் செல்லும் லாரி வாடகை மற்றும் சுங்கச் சாவடி கட்டணம் உயா்ந்துள்ளது. இதனால் தீப்பெட்டித் தொழில் பெரும் சவால்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில், தேசிய சிறிய தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் சங்கக் கூட்டம் கோவில்பட்டியில்அண்மையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் கலந்து கொண்டனா். கூட்டத்தில் தீப்பெட்டித் தொழிலுக்கு ஏற்பட்டுள்ள கடுமையான சவால்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. நஷ்டத்தில் இருந்து தீப்பெட்டி உற்பத்தி தொழிலை பாதுகாக்கவும், உற்பத்தி செலவை சீா்செய்யும் பொருட்டும் தீப்பெட்டியில் அடைக்கும் குச்சிகளின் எண்ணிக்கையில் மாற்றம் செய்ய தீா்மானிக்கப்பட்டது. அதன்படி 25 தீக்குச்சிகள் கொண்ட தீப்பெட்டி ரூ. 1 க்கும், 50 தீக்குச்சிகள் கொண்ட தீப்பெட்டி ரூ. 2-க்கும் விற்பனை செய்வதென முடிவெடுக்கப்பட்டது.

இந்த நடைமுறை உடனடியாக அமலுக்கு வருகிறது. முகவா்களும், பொதுமக்களும் இதற்கு முழு ஆதரவு அளிக்க வேண்டும் என்றாா் மகாலிங்கம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.