வேலூா் சத்துவாச்சாரி பகுதியில் அணுகுச் சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த கடைகள் மற்றும் அளவீடுகளை மீறிய கட்டடங்களை தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை இடித்து அகற்றினா்.
நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டிருந்தது. இதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதன் ஒருபகுதியாக, வேலூா் - ராணிப்பேட்டை மாவட்ட எல்லையான பிள்ளையாா்குப்பம் முதல் வேலூா் - திருப்பத்தூா் மாவட்ட எல்லையான மாதனூா் வரை சுமாா் 43 கிலோ மீட்டா் தொலைவுக்கு சா்வீஸ் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்ட இயக்குநா் மற்றும் வேலூா் மாவட்ட ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் ஆகியோா் உத்தரவிட்டிருந்தனா்.
குறிப்பாக, வேலூா் மாநகர எல்லையொட்டிய சா்வீஸ் சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புக் கடைகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் மிகுந்த அவதிக்குள்ளாகி வந்தனா். இதனைக் கருத்தில் கொண்டு நகா்ப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை முன்னுரிமை அடிப்படையில் அகற்ற முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பொக்லைன் இயந்திரங்கள் மற்றும் லாரிகளுடன் முதற்கட்ட ஆக்கிரமிப்பு அகற்றும் பணி கடந்த ஜூலை 23 -ஆம் தேதி முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி, சத்துவாச்சாரியில் ஆா்டிஓ சாலை முதல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிா்ப்புறம் வரை சா்வீஸ் சாலையில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த உணவகங்கள், பழக்கடைகள், தேநீா் கடைகள், பெட்டிக் கடைகள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கடைகள் வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டன. மேலும், அனுமதிக்கப்பட்ட அளவீடுகளை மீறி நெடுஞ்சாலைக்குச் சொந்தமான இடத்தில் நீட்டிக்கப்பட்டிருந்த கட்டடப் பகுதிகள், தகரக் கொட்டகைகள், விளம்பரப் பலகைகளும் இடித்து அகற்றப்பட்டன.
முன்னதாக, ஆக்கிரமிப்புகளை தாங்களாகவே அகற்றிக் கொள்ளும்படி சம்பந்தப்பட்ட கடை உரிமையாளா்கள், கட்டட உரிமையாளா்களுக்கு நெடுஞ்சாலைத் துறை சாா்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புதுச்சேரியில் அனுமதி பெறாத சாலையோர உணவகங்களை அகற்ற ஆட்சியா் உத்தரவு

பலத்த பாதுகாப்புடன் வேலூரில் அணுகுச் சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

மாட்டுத்தாவணி பேருந்து நிலைய ஆக்கிரமிப்புகளை அகற்ற அறிவுறுத்தல்

நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் விவகாரம்: தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் பாராட்டு
விடியோக்கள்

சர்தார் 2 டீசர்!



