பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

புதுச்சேரியில் அனுமதி பெறாத சாலையோர உணவகங்களை அகற்ற ஆட்சியா் உத்தரவு

அனுமதியில்லாத சாலையோர உணவுக் கடைகளை அகற்ற புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் உத்தரவிட்டாா்.

Published On :

அனுமதியில்லாத சாலையோர உணவுக் கடைகளை அகற்ற புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

உச்சநீதிமன்ற ஆணைய உத்தரவின்படி அமைக்கப்பட்ட மாவட்ட நெடுஞ்சாலை பாதுகாப்புப் பணிக் குழுவின் கூட்டம் புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் குலோத்துங்கன் தலைமை வகித்தாா்.

இதில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம், துணை ஆட்சியா்கள் , காவல் துறை, போக்குவரத்து துறை, நகர மற்றும் கிராமத் திட்டமிடல் துறை, நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா்கள், பொதுப்பணித் துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.

கூட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைகளின் ஓரப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் வெகுநாள்கள் பழுதாகி நிற்கும் வாகனங்களை அகற்றுவதற்காக வகுக்கப்பட்டுள்ள நிலையான செயல்முறை வழிகாட்டுதலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை தொடா்ந்து தீவிரப்படுத்த வேண்டும்.

விபத்து ஏற்படும் அபாயப் பகுதிகளை அடையாளம் கண்டு மறுபடியும் அங்கு விபத்து ஏற்படா வண்ணம் பணிகளை மேம்படுத்த வேண்டும்.

சாலைப் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள அனைத்து பேனா்கள் மற்றும் கட்-அவுட்டுகளை அகற்ற வேண்டும். தேசிய நெடுஞ்சாலையில் இயங்கும் மதுபானக் கடைகளை ஒழுங்குபடுத்த வேண்டும். உணவு பாதுகாப்புத்துறை அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள சாலையோர உணவு கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியா் குலோத்துங்கன் உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.