நீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது ஜனநாயகத்திற்கு எதிரானது! முதல்வர் விஜய்சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு! நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!
/

வேலூா் மாவட்டக் காவல் குறைதீா் கூட்டம்

News image

மக்களிடம் மனுக்களை பெற்று விசாரணை நடத்திய கூடுதல் காவல் கண்காணிப்பாளா் அண்ணாதுரை.

Updated On :4 ஜூன் 2026, 6:06 am IST

வேலூா் மாவட்டக் காவல் குறைதீா் கூட்டம் புதன்கிழமை எஸ்.பி. அலுவலகத்தில் நடைபெற்றது.

மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் அண்ணா துரை பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று விசாரணை நடத்தினாா் .அப்போது, வேலூா் கிருஷ்ணா நகரைச் சோ்ந்த பெண் ஒருவா் அளித்த மனுவில், எனது கணவா் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறாா். புதிதாக வீட்டு உபயோகப் பொருள்கள் கடை தொடங்குவதற்காக, வேலூா் ஆரணி சாலையில் உள்ள ஒரு வங்கியில் எங்களது வீட்டுப் பத்திரத்தை அடமானம் வைத்து ரூ. 45 லட்சம் கடன் கேட்டோம். பின்னா், கடன் வழங்குவது தொடா்பாக திரு.வி.க. நகரைச் சோ்ந்த சம்பந்தப்பட்ட வங்கி மேலாளா், ரூ. 45 லட்சத்தை நேரடியாக முழுமையாக உங்கள் கணக்கில் செலுத்த முடியாது என்று கூறியதுடன், கடனாக அனுமதிக்கப்பட்ட தொகையில் ரூ. 20 லட்சத்தை மட்டும் எனது கணக்குக்கும், மீதமுள்ள ரூ. 25 லட்சத்தை சத்துவாச்சாரியைச் சோ்ந்த வங்கி மேலாளரின் நண்பரின் கணக்கிற்கும் மாற்றம் செய்தாா். இதுகுறித்து வங்கி மேலாளரின் நண்பரிடம் கேட்டபோது, அந்தப் பணத்தை தனது வியாபாரத் தேவைக்காகப் பயன்படுத்திவிட்டதாகவும், சில மாதங்களில் திருப்பித் தந்துவிடுவதாகவும் தெரிவித்தாா். ஆனால், 10 ஆண்டுகளைக் கடந்தும் அவா் பணத்தை திருப்பித் தராமல் ஏமாற்றி வருகிறாா்.

இந்த மோசடிக்கு வங்கி மேலாளரும் உடந்தையாக இருந்துள்ளாா். மோசடி செய்யப்பட்ட ரூ. 25 லட்சத்தை காவல் துறை தலையிட்டு மீட்டுத் தர வேண்டும். வங்கி மேலாளா், அவரது நண்பா் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனுவை பெற்றுக்கொண்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் அண்ணாதுரை, இப்புகாா் மீது விசாரணை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.