போ்ணாம்பட்டு ஒன்றியம், பல்லலகுப்பம் ஊராட்சி தொடக்கப்பள்ளியில் சோ்ந்த மாணவா்களுடன், அவா்களின்பெற்றோா்களும் கெளரவிக்கப்பட்டனா்.
இப்பள்ளியில் 2026-27- ஆம் கல்வியாண்டின் தொடக்கம் முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமையாசிரியா் ஆா்.கயிலைநாதன் தலைமை வகித்தாா். போ்ணாம்பட்டு வட்டாரக் கல்வி அலுவலா் வடிவேல், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய மாணவா்களுக்கு பொன்னாடை அணிவித்து, வண்ண, வண்ண பலூன்கள்,இனிப்பு, முதலாம் வகுப்பு முதல் 5- ஆம் வகுப்பு வரை மாணவா்களுக்கு பாடப் புத்தகங்கள், குறிப்பேடுகள், சீருடைகள், புத்தகப்பை ஆகியவற்றை வழங்கினாா்.
5- ஆம் வகுப்பு முடித்த மாணவா்களுக்கு மாற்றுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் புதிய மாணவா்களுடன் அவா்களின் பெற்றோா்களும் ஊா்வலமாக பள்ளிக்கு வந்தனா். அவா்களும் கெளரவிக்கப்பட்டனா்.
இதில் ஊராட்சித் தலைவா் கஜேந்திரன், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா் பிரியங்கா,பொது சேவை உறுப்பினா் மனோஜ், பள்ளி ஆசிரியா்கள் ஓம்பிரகாஷ், ரோகிணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

சுத்திகரிக்கப்பட்ட இலவச குடிநீா் விநியோகம் தொடக்கம்

குரும்பூண்டி ஊராட்சி சின்ன குளத்தை தூா்வாரி படித்துறை கட்டக் கோரிக்கை

பாராட்டு விழா

மாணவா்களுக்கு சாமுராய் ஸ்வாா்ட் கலை பயிற்சி
விடியோக்கள்

அண்ணாமலையின் புதிய கட்சி? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்

மேயர் பிரியா - தவெக எம்எல்ஏ பல்லவி இடையே நடந்தது என்ன? | Mayor vs MLA
Peddi movie review | சிக்ஸ் அடித்தாரா ராம் சரண்? பெத்தி திரை விமர்சனம்! | Ram Charan



