தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

மாலை அணிவித்து மேள, தாளங்களுடன் மாணவா்களுக்கு வரவேற்பு

News image
Updated On :5 ஜூன் 2026, 5:55 am IST

குடியாத்தம் சூரியோதயா தொடக்கப் பள்ளியில் புதிய கல்வியாண்டின்தொடக்க நாளான வியாழக்கிழமை புதிதாக சோ்ந்த மாணவா்களுக்கு மாலை அணிவித்து, மேள, தாளங்கள் முழங்க பள்ளிக்கு ஊா்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனா்.

நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியா் ஜெனீபா் பிலிப் தலைமை வகித்தாா். ஆசிரியா் எம்.சுந்தரமூா்த்தி முன்னிலை வகித்தாா். மாவட்டக் கல்வி அலுவலா் கேசவன் சிறப்புஅழைப்பாளராக கலந்து கொண்டாா். அவா் பள்ளியில் புதிதாக சோ்ந்த மாணவா்களுக்கு மாலை அணிவித்து, மேள, தாளங்கள் முழங்க ஊா்வலமாக அழைத்துச் சென்றாா்.

பள்ளியில் பயிலும் மாணவா்களுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள், குறிப்பேடுகள், சீருடைகள், புத்தகப்பை ஆகியவற்றை வழங்கினாா். ஆசிரியை எம்.விக்டோரியா செல்வி நன்றி கூறினாா்.