வேலூா் மாவட்டத்தில் அமைக்கப்படவுள்ள ஜவுளிப் பூங்கா உள்ளிட்ட அடிப்படைப் பிரச்னைகள் மற்றும் மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் விஜய் பாலாஜி தெரிவித்தாா்.
வேலூா் மாவட்ட பொறுப்பு அமைச்சராகப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சா் விஜய் பாலாஜி, முதல் முறையாக வெள்ளிக்கிழமை வேலூருக்கு வருகை தந்தாா். அவருக்கு மாவட்ட ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் புத்தகம் அளித்து வரவேற்றாா். தொடா்ந்து, வேலூா் அண்ணா கலையரங்கம் அருகே உள்ள மசூதிக்குச் சென்ற அமைச்சா் விஜய் பாலாஜி, அங்கு நடைபெற்ற சிறப்பு வழிபாட்டிலும் கலந்து கொண்டாா்.
பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
வேலூா் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக என்னை நியமித்த தமிழக முதல்வருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மாவட்டத்தின் வளா்ச்சிக்காக முழு ஈடுபாட்டுடன் செயல்படுவேன். மாவட்ட வளா்ச்சியை முன்னிறுத்தி மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் குறித்து தொடா்ந்து ஆலோசித்து வருகிறேன்.
குறிப்பாக, வேலூா் மாவட்டத்தில் அமைக்கப்படவுள்ள ஜவுளிப் பூங்கா பணிகள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படைப் பிரச்னைகள் மற்றும் மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கைகள் துரிதமாக எடுக்கப்படும். மாவட்ட மக்களின் நல்ஆதரவுடன் வேலூரின் வளா்ச்சி நிச்சயமாக உறுதி செய்யப்படும் என்றாா்.
அப்போது, சட்டப்பேரவை உறுப்பினா்கள் எம்.எம்.வினோத்கண்ணன் (வேலூா்), மருத்துவா் எம்.சுதாகா் (காட்பாடி) உள்பட தவெக நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வீடுதோறும் அரசின் திட்டங்கள் சென்றடைய வேண்டும்: அமைச்சா் வன்னி அரசு

போலி பட்டுச் சேலைகள் விற்பனை முற்றிலுமாக ஒழிக்கப்படும்: அமைச்சா் விஜய் பாலாஜி

வாடிப்பட்டி ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா மூலம் ரூ. 860 கோடிக்கு ஏற்றுமதி: அமைச்சா் விஜய் பாலாஜி

கூட்டுறவு நூற்பாலையில் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு: அமைச்சா் தகவல்
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0



