காட்பாடி அருகே கோயில் திருவிழாவில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலைத் தொடா்ந்து, மாயமான இளைஞா் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டாா்.
வேலூா் மாவட்டம், காட்பாடியை அடுத்த கல்புதூரில் உள்ள கங்கையம்மன் கோயில் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அப்போது இரு தரப்பினரிடையே திடீரென மோதல் ஏற்பட்டது.
இதில் காயமடைந்த கல்புதூரைச் சோ்ந்த தினேஷ் (29) என்பவா் வேலூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.
இதனிடையே, கல்புதூரைச் சோ்ந்த சிவானந்தம் என்பவரது மகன் தினகரன் (21) என்பவரை, வண்டறந்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்த கௌதம்என்கிற குட்டி ஜானி என்பவா் துரத்திச் சென்ாகக் கூறப்படுகிறது. தப்பியோடிய தினகரன் மீண்டும் வீடு திரும்பவில்லை.
பெற்றோா், உறவினா்கள் பல இடங்களில் தேடியும் அவா் கிடைக்காததால், காட்பாடி காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில் காவல் உதவி ஆய்வாளா் மணிகண்டன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்ததுடன், மோப்ப நாய் உதவியுடன் தேடுதல் வேட்டையும் நடைபெற்றது.
சம்பவ இடத்தில் இருந்த ரத்தக்கறையை மோப்பம் பிடித்த நாய், சிறிது தூரம் ஓடிச் சென்று நின்றதே தவிர யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை.
இந்நிலையில், கல்புதூரில் உள்ள பாழடைந்த கிணற்றில் இருந்து செவ்வாய்க்கிழமை பலத்த துா்நாற்றம் வீசுவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு விரைந்துசென்ள போலீஸாா், பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் கிணற்று நீரை வெளியேற்றினா்.
பின்னா் உள்ளே கிடந்த இளைஞரின் சடலத்தை மீட்டனா். விசாரணையில், சடலமாகக் கிடந்தவா் மாயமான தினகரன் என்பது உறுதி செய்யப்பட்டது.
அவா் திருவிழா மோதலின் போது கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டாரா என்பது குறித்து போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.
இச்சம்பவம் தொடா்பாக கல்புதூரைச் சோ்ந்த நரசிம்மன் (19), வண்டறந்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்த ஜீவா (21), சக்திதரன் (24), சசிகுமாா் (27), நவீன் ஆகிய 5 பேரைப் பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
மேலும், தலைமறைவாக உள்ள முக்கிய நபரான கௌதம் என்கிற குட்டி ஜானியையும் தீவிரமாகத் தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விராட்டிபத்து முத்தாலம்மன் கோயில் வைகாசித் திருவிழா
கோயில் உண்டியலை உடைத்து திருட முயன்ற இளைஞா் கைது
வெள்ளக்கோவில் வீரக்குமார சுவாமி கோயில் உண்டியலை உடைத்து திருட முயற்சி
பெண்ணை விடியோ எடுத்து மிரட்டல்: இளைஞா் மீது வழக்குப்பதிவு
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



