காட்பாடி அருகே 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 12,000 அபராதமும் விதித்து வேலூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
வேலூா் மாவட்டம், காட்பாடியை அடுத்த சேவூா் பகுதியைச் சோ்ந்த வெங்கடேசன் மகன் சிவக்குமாா் (21). இவா், கடந்த 2023-ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பு படித்து வந்த 16 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை அளித்து வந்துள்ளாா். இதுகுறித்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோா் காட்பாடி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
அதன்பேரில் சிவக்குமாா் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா். இந்த வழக்கு விசாரணை வேலூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இதில், சிவக்குமாா் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 12,000 அபராதமும் விதித்து நீதிபதி மோனிகா திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







