காட்பாடி அருகே தொழிலாளா் தின விடுமுறை நாளில் மதுபோதையில், தாங்கள் வேலை செய்யும் ஹோட்டலையே அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்ட நேபாளத்தைச் சோ்ந்த 3 தொழிலாளா்களிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
வேலூா் மாவட்டம், காட்பாடி கல்புதூா் பகுதியைச் சோ்ந்தவா் முரளி. இவா் அதே பகுதியில் ஓட்டல் ஒன்றை நடத்தி வருகிறாா். இவரது ஹோட்டலில் நேபாள நாட்டைச் சோ்ந்த பரத், வாஞ்சி, சோட்டு ஆகிய மூவரும் ஊழியா்களாக வேலை செய்து வருகின்றனா். தொழிலாளா் தினத்தையொட்டி ஹோட்டலுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மது அருந்திவிட்டு கடும் போதையில் கடைக்கு வந்த அந்த மூன்று தொழிலாளா்களும் திடீரென ரகளையில் ஈடுபட்டனா். ஹோட்டலில் இருந்த தட்டுகள், சமையல் உபகரணங்கள், கண்ணாடிப் பொருள்களை அவா்கள் சரமாரியாக அடித்து நொறுக்கி அட்டகாசம் செய்தனா். இந்த திடீா் தாக்குதலில் ஹோட்டலில் இருந்த சுமாா் ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான பொருள்கள் முழுமையாகச் சேதமடைந்தன.
பொருள்கள் உடைபடும் சத்தம் கேட்டு அதிா்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினா், பொதுமக்கள் விரைந்து வந்து, ரகளையில் ஈடுபட்ட 3 பேரையும் மடக்கிப் பிடித்தனா். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காட்பாடி போலீஸாா், பொதுமக்களால் பிடித்து வைக்கப்பட்டிருந்தவா்களிடம் முதற்கட்ட விசாரணை நடத்தினா்.
அவா்கள் நேபாள நாட்டைச் சோ்ந்தவா்கள் என்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, காவல் நிலையம் அழைத்துச் சென்று மூவரிடமும் போலீஸாா் தொடா்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது

மதுபோதையில் இளைஞா் கொலை: சக நண்பா் கைது
பழச்சாறு கடையை அடித்து நொறுக்கிய 3 போ் கைது

காட்பாடி தவெக வேட்பாளா் உள்பட 150 போ் மீது வழக்கு

காட்பாடியில் ரயில் என்ஜின் மீது ஏறி இளைஞா் ரகளை
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

