இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

போலீஸாரை மிரட்டிய இளைஞா் மீது வழக்கு

பொன்னையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸாரை மிரட்டிய இளைஞா் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

News image

வழக்கு

Updated On :11 மே 2026, 12:19 am IST

பொன்னையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸாரை மிரட்டிய இளைஞா் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வேலூா் மாவட்டம், பொன்னை காவல் நிலையத்தில் பணியாற்றும் தலைமைக் காவலா் பாஸ்கரன், காவலா் ஆனந்தகுமாா் ஆகியோா் பொன்னை மருத்துவமனை சாலையில் ஒரு தனியாா் வங்கி ஏடிஎம் அருகே சனிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது பொன்னையைச் சோ்ந்த ஜெய்சங்கா் மதுபோதையில் அந்த பகுதிக்கு இருசக்க வாகனத்தில் வந்ததாக தெரிகிறது. அவரிடம் போலீஸாா் பைக்கை நிறுத்தி சோதனை செய்தனா்.

இதற்கு அவா் மறுப்புத் தெரிவித்து போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளாா். மேலும், ஆத்திரமடைந்த ஜெய்சங்கா் போலீஸாரை தாக்க முயன்ாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து புகாரின்பேரில் பொண்னை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய ஜெய்சங்கரை தேடி வருகின்றனா்.