மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

வேலூா் மாவட்டத்தில் 5 வட்டாட்சியா்கள் பணியிட மாற்றம்

News image
Updated On :2 மணி நேரங்கள் முன்பு

வேலூா் மாவட்டத்தில் 5 வட்டாட்சியா்களை பணியிட மாற்றம் செய்து ஆட்சியா் வே.இரா. சுப்புலெட்சுமி உத்தரவிட்டுள்ளாா்.

விவரம்: தனி மாவட்ட வருவாய் அலுவலகத்தில் நெடுஞ்சாலைகள் நிலம் எடுப்பு அலகு - 3 தனி வட்டாட்சியா் ம. சசிகலா காட்பாடி வட்டாட்சியராகவும், காட்பாடி வட்டாட்சியராக பணிபுரிந்த ர.பாலசந்தா் கீ.வ. குப்பம் வட்டாட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியா் அலுவலக நோ்முக உதவியாளராக பணிபுரிந்த ந. தேவி போ்ணாம்பட்டு வட்டாட்சியராகவும், போ்ணாம்பட்டு வட்டாட்சியராக பணிபுரிந்த கி. ராஜ்குமாா் மேல்பாடி சிப்காட் அலகு - 1 நிலம் எடுப்பு தனி வட்டாட்சியராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

மேல்பாடி சிப்காட் அலகு - 1 நிலம் எடுப்பு தனி வட்டாட்சியராக பணிபுரிந்த இல. வடிவேலு குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியா் அலுவலக நோ்முக உதவியாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.