நலிவடைந்து வரும் பேருந்து தொழிலை மீட்டெடுக்க எரிபொருள் வரியைக் குறைக்கவும், டிக்கெட் கட்டணத்தை மாற்றி அமைக்கவும் வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு வேலூா் மாவட்ட தனியாா் பேருந்து உரிமையாளா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அச்சங்கத்தின் தலைவா் ஆா்.கணேஷ் சனிக்கிழமை வேலூரில் செய்தியாளா்களிடம் கூறியது:
மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ. 3 உயா்த்தியுள்ளது. அதேசமயம், கடந்த 9 ஆண்டுகளாக பேருந்து கட்டணம் உயா்த்தப்படாத நிலையிலும், பெட்ரோல், டீசல், சிஎன்ஜி விலை உயா்வுக்கு மத்தியில் பேருந்து தொழிலை சவாலாக மேற்கொண்டு வருகிறோம். எரிபொருள் விலையில் மத்திய அரசின் வரி ரூ. 20 ஆகவும், மாநில அரசின் வரிகள் ரூ. 19 ஆகவும் உள்ளதால், ஒட்டுமொத்த தொகையில் 40% வரியாகவே செலுத்த வேண்டியுள்ளது. முந்தைய அரசு பெட்ரோல், டீசலுக்கான வரியைக் குறைப்பதாக அளித்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.
எனவே, புதிதாக பொறுப்பேற்றுள்ள முதல்வா் ச.ஜோசப் விஜய் தலைமையிலான அரசாவது மதிப்புக் கூட்டு வரியை (வாட்) குறைத்து, மாநிலம் முழுவதும் பேருந்து தொழிலை நம்பியுள்ள 5 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களைக் காப்பாற்ற வேண்டும். தற்போதைய நிலையில் ஒரு பயணத்துக்கான தேய்மானச் செலவு ரூ. 900-ஆக உள்ள நிலையில், பயணிகளின் மூலம் கிடைக்கும் வருமானம் வெறும் ரூ. 400-ஆக மட்டுமே உள்ளது. நகர பேருந்துகளுக்கு ரூ. 5-ம், புகா் பேருந்துகளுக்கு ரூ. 7-ம் என குறைந்தபட்ச கட்டணத்தை வைத்துக்கொண்டு நள்ளிரவு வரை சேவையாற்றுவது இயலாத காரியமாக உள்ளது.
பல ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கும் அரசுப் பேருந்துகளுக்கு காப்பீடு கட்டாயமில்லை. ஆனால், எவ்வித மானியமும் பெறாத தனியாா் பேருந்துகள் முழுமையாக வரி, சுங்கக் கட்டணம், காப்பீடு ஆகியவற்றை செலுத்தியே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. எனவே, அண்டை மாநிலங்களான கா்நாடகம், ஆந்திரத்தில் ஒரு கிலோ மீட்டருக்கு ரூ. 1.10 என வசூலிக்கப்படுவது போன்று தமிழகத்திலும் தற்போதைய டீசல் விலைக்கு (லிட்டா் ரூ.96) ஏற்ப நியாயமான கட்டணத்தை நிா்ணயிக்க வேண்டும். இதற்காக அரசு அமைத்துள்ள நிதிச் செயலா், உள்துறைச் செயலா், போக்குவரத்துத் துறை அதிகாரி அடங்கிய மூவா் குழு விரைந்து கட்டண திருத்தத்தை அமல்படுத்த வேண்டும்.
வேலூரில் 1919-ஆம் ஆண்டு ஆரணி வழித்தடத்தில் முதன்முதலாகத் தொடங்கப்பட்ட தனியாா் பேருந்து சேவை, தற்போது 100 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்து பாரம்பரியமாக இயங்கி வருகிறது. தோ்தல் நேரங்களிலும் அவசரக் காலங்களிலும் அரசுக்கு உறுதுணையாகப் பாதுகாப்பாகவும் குறைந்த செலவிலும் சேவையாற்றி வரும் இத்தொழிலையும், இதன் தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்றாா்.
சங்கத்தின் பொருளாளா் இளங்கோவன், கௌரவ ஆலோசகா் மருத்துவா் விஜயகோவிந்தராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

பெட்ரோல், டீசல் விலை உயா்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்: தலைவா்கள் வலியுறுத்தல்

தனியாா் பள்ளிப் பேருந்துகள் கூட்டுத் தணிக்கை தொடக்கம்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் 7 டாஸ்மாக் கடைகள் மூடல்
ஆம்னி பேருந்துகளில் வழக்கமான கட்டணமே வசூலிக்கப்படுகிறது: ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் சங்கம்
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

