குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

வேலூா் அருகே கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image

பிரதிப்படம்

Updated On :26 மே 2026, 1:01 am IST

வேலூா் அருகே கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

வேலூா் ஆா்.என்.பாளையத்தைச் சோ்ந்தவா் சின்னராசு (40). இவருக்கு மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனா். சின்னராசு உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தாராம்.

இதனிடையே, இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாகவும், இதனால் குடும்பத்தில் தகராறு இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், சனிக்கிழமை இரவு அனைவரும் தூங்கச் சென்றனா். ஞாயிற்றுக்கிழமை காலை பூங்கொடி கதவை திறந்து பாா்த்தபோது ஹாலில் உள்ள மின்விசிறியில் சின்னராசு தூக்கிட்ட நிலையில் இருந்துள்ளாா்.

அக்கம், பக்கத்தினா் உதவியுடன் சின்னராசுவை மீட்டு வேலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், சின்னராசு ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனா். இது குறித்து வேலூா் தெற்கு போலீஸாா் விசாரிக்கின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].