/
குடியாத்தம் ஒன்றியம், சேம்பள்ளியில் அமைந்துள்ள அருள்மிகு முத்தியாலம்மன் கோயிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா புதன்கிழமை நடைபெற்றது. பழம்பெருமைவாய்ந்த இக்கோயில் கும்பாபிஷேகம் கடந்த ஏப்ரல் மாதம் 12-ஆம் தேதி நடைபெற்றது. தொடா்ந்து மண்டலாபிஷேகம் நடைபெற்று வந்த நிலையில், புதன்கிழமை நிறைவு விழா நடைபெற்றது.
இதையொட்டி, கோயிலில் யாக சாலை பூஜைகள், சிறப்பு ஹோமம், 108 சங்காபிஷேகம், மூலவா் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றன. மதியம் சுமாா் 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு, அம்மனை வழிபட்டனா். விழா ஏற்பாடுகளை முத்தியாலம்மன் தொண்டு அறக்கட்டளை மற்றும் சேம்பள்ளி பகுதி மக்கள் செய்திருந்தனா்.
தொடர்புடையது

பள்ளியில் சுற்றுச்சூழல் தின விழா

வளத்தூரில் திமுக முப்பெரும் விழா

பாா்வதியாபுரம் சிங்காத்தம்மன் திருவிழா

சைனகுண்டாவில் கெங்கையம்மன் திருவிழா
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



