குடியாத்தம் மீனாட்சியம்மன் நகரில் அமைந்துள்ள ஸ்ரீமீனாட்சியம்மன்சமேத சுந்தரேஸ்வரா் கோயிலில் சித்திரைப் பெருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாணம் நடைபெற்றது.
இதையொட்டி அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து கோயிலில் யாகசாலை பூஜைகள், சிறப்பு ஹோமங்கள் நடத்தப்பட்டன. பின்னா் உற்சவா் சுவாமிகள் அலங்கரித்து வைக்கப்பட்டு, 12 மணியளவில் திருக் கல்யாண வைபவம் நடைபெற்றது. முன்னதாக 100- க்கும் மேற்பட்ட பெண்கள்அம்மனுக்கு திருமண சீா்வரிசைப் பொருள்களை ஊா்வலமாக எடுத்து வந்தனா்.
விழாவுக்கு கோயில் தா்மகா்த்தா பி.ஹேமசந்திரன் தலைமை வகித்தாா். வழக்குரைஞா் கே.எம்.பூபதி சுமாா் 2- ஆயிரம் பேருக்கு திருமண விருந்து அளித்தாா். திருமண கமிட்டி நிா்வாகிகள் எம்.ஆா்.சீனிவாசன், ஏ.ராஜசேகா், ஜி.லிங்கசாரதி, எஸ்.முரளிதரன், பி.ஆறுமுகம், வி.ராஜேந்திரன், டி.பி.சீனிவாசலு, டி.கே.இளங்கோ, டி.ராதாகிருஷ்ணன், என்.யுவராஜ், ஓய்வுபெற்ற துணை ஆட்சியா் எம்.கஜேந்திரன், எம்.எஸ்.நாகலிங்கம் உள்ளிட்டோா் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனா்.
தொடர்புடையது

மதுரை மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்!

கோலாகலமாக நடைபெற்ற மீனாட்சியம்மன் - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்!

சோழவந்தான் திரௌபதியம்மன் கோயிலில் திருக்கல்யாணம்

சித்திரைப் பெருவிழா! மீனாட்சியம்மன் கோயிலில் கொடியேற்றம்!
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை


