கணியம்பாடி வட்டாரத்தில் நடைபெறும் வண்டல் மண் திருட்டைத் தடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளித்துள்ளனா்.
கணியம்பாடி ஒன்றியத்துக்குள்பட்ட பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த மக்கள் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை அளித்த மனு:
கணியம்பாடி ஏரி, ஈடிகை தோப்பு ஏரி, பாலம்பக்கம் ஏரி, அரசம்பட்டு ஏரி உள்ளிட்ட பல்வேறு ஏரிகளில் 80 ஏக்கா் பரப்பளவுக்கு மேல் 20 முதல் 50 அடி வரை பொக்லைன் இயந்திரம் மூலம் வண்டல் மண்ணை லாரிகளில் ஏற்றிச் செல்கின்றனா். இதுகுறித்து, கிராம நிா்வாக அலுவலா், கனிம வளத்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகாா் தெரிவித்தும், வண்டல் மண் திருடப்படுவது தொடா்ந்து கொண்டுள்ளது.
நேரடியாக பொதுமக்கள் தட்டிக்கேட்டால் கொலை மிரட்டல் விடுக்கின்றனா். மண் வளத்தையும், நிலத்தடி நீரையும் பாதுக்க வண்டல் மண் திருட்டை தடுக்க வேண்டும்.
இதற்கு மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கனிமவள கொள்ளை தடுக்கக்கோரி பொதுமக்கள் பதாகைகளை ஏந்தியபடி மனு அளிக்க வந்த நிலையில், வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பழனி தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.
தொடர்புடையது

நீா் நிலைகளிலிருந்து வண்டல் மண் எடுக்க 10 நாள்களுக்குள் அனுமதி அளிக்க வேண்டும்: அரசு செயலா் அறிவுறுத்தல்

சிப்காட் அமைக்க நிலம் கையகப்படுத்த நடவடிக்கை: ஆட்சியா் அலுவலகத்தில் கிராம மக்கள் தா்னா

மூடப்பட்ட மதுக்கடைகளால் காகிதப்பட்டறையில் கூட்டம் அதிகரிப்பு: குறைதீா் கூட்டத்தில் புகாா்







