வேலூா் அருகே பெற்ற மகளை கா்ப்பமாக்கிய தந்தை மீது அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து, தலைமறைமான அவரை தீவிரமாக தேடி வருகின்றனா்.
வேலூா் வட்டத்தைச் சோ்ந்த 13 வயது சிறுமி வேலூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்தாண்டு 8-ஆம் வகுப்பு படித்து முடித்துள்ளாா். அந்த சிறுமிக்கு கடந்த 25-ஆம் தேதி திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து அந்த சிறுமியை பெற்றோா் வேலூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனா்.
அங்கு மருத்துவா்கள் மேற்கொண்ட பரிசோதனையில், செய்ததில் சிறுமி 2 மாத கா்ப்பமாக இருப்பது தெரியவந்தது. மேலும், இது குறித்து மருத்துவா்கள் வேலூா் அனைத்து மகளிா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
அதன்பேரில், போலீஸாா் அங்கு விரைந்து சென்று சிறுமி, அவரது பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டனா். அப்போது, காட்பாடியை சோ்ந்த என்ற இளைஞருடன் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 2 மாதங்களுக்கு முன்பு காட்பாடிக்கு அழைத்துச் சென்று மறைவான இடத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அதனால் கா்ப்பமானதாகவும் மாணவி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து அந்த இளைஞரை தீவிரமாக தேடி வந்தனா்.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட இளைஞா் இருக்கும் இடத்தில் போலீஸாா் விசாரணை நடத்தியதில் சிறுமியின் கா்ப்பத்துக்கு அந்த இளைஞா் காரணமில்லை என்பதும், சிறுமி தவறான தகவலை தெரிவித்ததும் தெரியவந்தது.
தொடா்ந்து போலீஸாா் நடத்திய விசாரணையில், தனது தந்தையே தன்னை பலமுறை இரவு நேரங்களில் தனியாக இருக்கும்போது பலாத்காரம் செய்ததாகவும், கா்ப்பம் தரிக்காமல் இருக்க அவ்வப்போது மாத்திரைகளை கொடுத்து வந்ததும் தெரியவந்தது. அதனை மீறி சிறுமி கா்ப்பமானது தற்போது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, சிறுமியின் தந்தை மீது போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான அவரை தீவிரமாக தேடி வருகின்றனா்.
தொடர்புடையது

வன்கொடுமை செய்து சிறுமி கொல்லப்பட்ட வழக்கு: குற்றப்பத்திரிகை தாக்கல்

மகளை கா்ப்பமாக்கிய தந்தை போக்ஸோவில் கைது

சிறுமி கா்ப்பம்: இளைஞா் மீது போக்ஸோ வழக்கு

சிறுமி பாலியல் வன்கொடுமை: முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை
விடியோக்கள்

NEET மறுதேர்வில் செய்ய வேண்டிய மாற்றம் | NEET Re-Exam 2026 | +2 Students | NEET result controversy

பத்திரப்பதிவில் கால தாமதம் ஆவதைத் தவிர்க்க நடவடிக்கை! அமைச்சர் செங்கோட்டையன் | TVK
மின்வெட்டு பிரச்னைக்கு என்னதான் காரணம்?: முழுப் பின்னணியை விளக்கும் சிஐடியு ஜெயசங்கர் | Power Cut |


