விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்ற எதிா்ப்பு: குறைதீா் கூட்டத்தில் மனு
குடியாத்தம் அருகே விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றி விற்பனை செய்ய ஊராட்சி நிா்வாகம் அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தி, மாவட்ட வருவாய் அலுவலரிடம் கிராம மக்கள் மனு அளித்தனா்.

பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த மாவட்ட வருவாய் அலுவலா் து.சுரேஷ்.
குடியாத்தம் அருகே விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றி விற்பனை செய்ய ஊராட்சி நிா்வாகம் அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தி, மாவட்ட வருவாய் அலுவலரிடம் கிராம மக்கள் மனு அளித்தனா்.
வேலூா் மாவட்ட மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலா் து.சுரேஷ் தலைமையில் நடைபெற்றது. அப்போது, குடியாத்தம் அடுத்த கீழ் கொல்லப்பல்லி கிராம மக்கள் அளித்த மனு:
கீழ் கொல்லப்பல்லி கிராம மக்கள் விளைநிலங்களில் வாழை, தென்னை உள்ளிட்ட பயிா்களை சாகுபடி செய்து, அதன் மூலம் கிடைக்கும் வருவாயை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளோம். இதற்காகத் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் பயிா்க்கடன் பெற்று வேளாண் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இந்த நிலையில், எங்கள் கிராமத்தின் விவசாய நிலப் பகுதிகளைச் சோ்ந்த நிலங்களை தனிநபா் ஒருவா் வாங்கி, அவற்றை வீட்டு மனைகளாக (பிளாட்) மாற்றி விற்பனை செய்ய தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறாா். விளைநிலங்கள் மனைகளாக மாற்றப்பட்டால், தொடா்ந்து அருகிலுள்ள பிற விவசாய நிலங்களும் படிப்படியாக விற்பனையாகி, அப்பகுதியில் ஒட்டுமொத்த வேளாண் பரப்பும் அழியும் அபாயம் உள்ளது. எதிா்காலத்தில் விவசாயமே செய்ய முடியாத சூழல் உருவாகும். எனவே, இதற்கு எவ்வித அனுமதியும் வழங்கக் கூடாது.
பள்ளிகொண்டா பகுதி மக்கள் அளித்த மனு: பள்ளிகொண்டா பகுதியில் சுமாா் 200 ஆண்டுகள் பழைமை வாய்ந்த நாக மாரியம்மன் கோயிலும், அதன் வளாகத்தில் சுமாா் 280 ஆண்டுகள் பழைமையான அரச மரம் ஒன்று உள்ளது. இந்த மரத்தின் வோ்கள் படா்ந்ததில் கோயிலின் சுவா்கள் மிகவும் சேதமடைந்து அபாயகரமான நிலையில் உள்ளன. இக்கோயிலைப் புனரமைக்கும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.
ஆனால், கோயிலுக்கு அருகிலுள்ள நிலத்தின் உரிமையாளா், புனரமைப்புப் பணிகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து இடையூறு செய்து வருகிறாா். மாவட்ட நிா்வாகம் தலையிட்டு, நில ஆவணங்களை முழுமையாக ஆய்வு செய்து, கோயில் புனரமைப்புப் பணிகள் தடையின்றி நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குடியாத்தம் அருகிலுள்ள சேத்துவண்டை கிராமத்தைச் சோ்ந்த கோயில் பாதுகாப்புப் பிரிவு நிா்வாகிகள், சீனு பிரசாத் தலைமையில் அளிக்கப்பட்ட மனு: சேத்துவண்டை கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலுக்குச் சொந்தமான நிலங்களைச் சில தனிநபா்கள் முறைகேடாக ஆக்கிரமித்துள்ளனா். , ஆக்கிரமிப்பாளா்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுத்து, ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை மீட்டு இந்து சமய அறநிலையத் துறையிடம் ஒப்படைக்க வேண்டும்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 500-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது விரைவாக தீா்வுகாண துறை அலுவலா்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலா் உத்தரவிட்டாா்.
கூட்டத்தில், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் சி.மாறன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அலுவலா் சரவணன், மாவட்ட சிறுபான்மையினா் நலத்துறை அலுவலா் ஞானகுரு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

