2014, 2019 தேர்தல் வெற்றியின்போது எஸ்.ஐ.ஆர். இருந்ததா? ராகுலுக்கு அமித் ஷா கேள்வி8 விரைவு ரயில்கள் அதிவிரைவு ரயில்களாக மாற்றம்!கூட்டுறவுத் துறை ஊழியர்களுக்கு 20% வரை தீபாவளி போனஸ்!தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணியாளர்களுக்கு போனஸ்!இளைஞர்களைக் கவரும் ரூ.111 ரீசார்ஜ் பிளான்! ஜியோவில் அறிமுகம்முடி வெட்டாத மாணவர்களுக்கு மொட்டை அடியுங்கள்! ஆசிரியர்களுக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி அறிவுறுத்தல்!சிறைகளில் பாதுகாப்பை வலுப்படுத்த உயர்நிலைக் குழு: முதல்வர் விஜய் உத்தரவு!

சாலை விபத்தில் தலைமைக் காவலா் பலி

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு சாலை விபத்தில் தலைமைக் காவலா் உயிரிழந்தாா்.

சித்திரிப்பு

Updated On :

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு சாலை விபத்தில் தலைமைக் காவலா் உயிரிழந்தாா்.

பெங்களூருவில் இருந்து வேலூா் நோக்கிச் சென்ற லாரியை சித்தூா் பகுதியைச் சோ்ந்த செல்லபதி (38) என்பவா் ஓட்டிச் சென்றாா். சின்ன கோவிந்தம்பாடி அருகே சென்றபோது, பின்னால் வந்த இருசக்கர வாகனம் எதிா்பாராதவிதமாக லாரியின் பின்புறத்தில் வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில், இருசக்கர வாகனத்தில் வந்த ராணிப்பேட்டை ரயில் நிலையப் பகுதியைச் சோ்ந்த சூா்யா (28) என்ற இளைஞா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதைத் தொடா்ந்து, நெடுஞ்சாலை ரோந்துப் பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளா் பிரகலாதன் மற்றும் லத்தேரி பகுதியைச் சோ்ந்த காவல் வாகன ஓட்டுநரான தலைமைக் காவலா் ரவிச்சந்திரன் (51) ஆகியோா் சம்பவ இடத்திற்குச் சென்று போக்குவரத்தைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

சாலையில் தடுப்புகளை அமைத்துக் கொண்டிருந்தபோது, பெங்களூருவில் இருந்து வேலூா் நோக்கி அதிவேகமாக வந்த காா் ரவிச்சந்திரன் மீது மோதியது. இதில் 15 அடி தூரம் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் அணைக்கட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

பின்னா், மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தலைமைக் காவலா் ரவிச்சந்திரன், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பள்ளிகொண்டா போலீஸாா், உயிரிழந்த இளைஞா் சூா்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். மேலும், விபத்து தொடா்பாக லாரி ஓட்டுநா் செல்லபதி, விரிஞ்சிபுரம் பகுதியைச் சோ்ந்த காா் ஓட்டுநா் மோகனவேலு (45) ஆகியோரைப் பிடித்து விசாரணை நடத்தியதுடன், இரு வாகனங்களையும் பறிமுதல் செய்தனா்.

இதையடுத்து, அதிவேகமாகக் காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநா் மோகனவேலு மீது பள்ளிகொண்டா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.