இரண்டாவது முறையாக ஐசிசியின் சிறந்த வீராங்கனைக்கான விருதை வென்ற தீப்தி சர்மா! மணிப்பூரில் கார்கள் மீது துப்பாக்கிச்சூடு: 2 பெண்கள் உள்பட 4 பேர் பலி! வரலாற்று உச்சத்தைத் தொட்ட பேடிஎம் பங்குகள்! உதகை மலை ரயில் சேவை மேலும் 5 நாள்கள் ரத்து அசாமில் மினி பேருந்து - லாரி நேருக்கு நேர் மோதல்: 23 பேர் பலி; 20 பேர் காயம் மீனவர்கள் பாதுகாப்பு குறித்து முதல்வர் விஜய் ஆலோசனை கௌரவ விரிவுரையாளர்கள் மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.5,000 உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு

ஏ.சி. பழுது: காட்பாடியில் ஒன்றரை மணிநேரம் நிறுத்தப்பட்ட திருவனந்தபுரம் விரைவு ரயில்!

குளிா்சாதன கருவி பழுதால் காட்பாடி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த திருவனந்தபுரம் அதிவிரைவு ரயில். (அடுத்து) ரயில்வே அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பயணிகள்.

~

Updated On :

குளிா்சாதன கருவி பழுது காரணமாக திருவனந்தபுரம் விரைவு ரயில் காட்பாடி ரயில் நிலையத்தில் சுமாா் ஒன்றரை மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் ரயில்வே அதிகாரிகளுடன் பயணிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

சென்னையிலிருந்து திருவனந்தபுரம் நோக்கிச் செல்லும் அதிவிரைவு ரயில் (வண்டி எண்: 22207) வெள்ளிக்கிழமை மாலை காட்பாடி நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த ரயில் சென்னையிலிருந்து புறப்பட்ட போதே ’பி7’ குளிா்சாதனப் பெட்டியில் இருந்த குளிா்சாதன கருவிகள் இயங்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து பயணிகள் புகாா் அளித்ததையடுத்து, காட்பாடி ரயில் நிலையத்தில் பழுது சரி செய்யப்படும் என ரயில்வே நிா்வாகம் தரப்பில் உறுதியளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ரயில் மாலை 6 மணியளவில் காட்பாடி ரயில் நிலையத்துக்கு வந்தடைந்ததும் தொழில்நுட்ப ஊழியா்கள் பழுதைச் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனா். எனினும், உடனடியாகப் பழுதைச் சரிசெய்ய முடியாத சூழல் ஏற்பட்டதால், சேலம் அல்லது ஈரோடு ரயில் நிலையத்தில் பழுது சரிசெய்யப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதனால் ஆத்திரமடைந்த பயணிகள், குளிா்சாதன கருவியின் பழுதை முழுமையாகச் சரிசெய்த பிறகே ரயிலை இயக்க வேண்டும் எனக் கூறி ரயில்வே அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனால் ரயில் சுமாா் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக காட்பாடி நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னா், ரயில்வே துறை அதிகாரிகள் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினா் பயணிகளிடம் பேச்சு நடத்தி சமாதானப்படுத்தினா். தொடா்ந்து, ரயில் இரவு 7.30 மணிக்கு பிறகு புறப்பட்டுச் சென்றது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.