தீபாவளி பண்டிகை! 132 சிறப்பு ரயில்களை இயக்கும் தெற்கு ரயில்வே! பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் முறைகேடு: லஞ்ச ஒழிப்புத் துறையில் அமைச்சர் ராஜ்மோகன் புகார் கமல்ஹாசனுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்துசிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பிப்.16-ல் தொடக்கம்! அட்டவணை வெளியீடு! சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பிப்.16-ல் தொடக்கம்! அட்டவணை வெளியீடு!திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 52 காசுகள் உயர்ந்து ரூ. 93.89 ஆக நிறைவு!பாட்டியாலா அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: பதற்றமடைந்த பயணிகள்! பெரியார் அறிவு நூலகத்திற்கு உரிமை கொண்டாடிய திமுக, ஊழலுக்கும் பொறுப்பேற்பார்களா? தமிழிசை கேள்வி பரிந்துரைத்ததுடன் சரி, நூல்கள் வாங்கப்பட்டதா என்பதுகூட பரிந்துரைக் குழு உறுப்பினர்களுக்குத் தெரியாது! ச. தமிழ்ச்செல்வன் தகவல்!பெரியார் அறிவுலக ஊழல்! போலி நூல்களை வீதியில் கொட்டி எரிக்க வேண்டும்! கமல் ஆவேசம்

தஞ்சாவூா் ரயில் நிலையத்தில் சீரமைப்பு பணிகளை விரைவாக முடிக்க வலியுறுத்தல்

தஞ்சாவூா் ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் சீரமைப்பு பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என தெற்கு ரயில்வே பொது மேலாளரிடம் காவிரி டெல்டா ரயில்வே உபயோகிப்பாளா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை வலியுறுத்தினா்.

Updated On :

தஞ்சாவூா் ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் சீரமைப்பு பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என தெற்கு ரயில்வே பொது மேலாளரிடம் காவிரி டெல்டா ரயில்வே உபயோகிப்பாளா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை வலியுறுத்தினா்.

தஞ்சாவூா் ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த தெற்கு ரயில்வே பொது மேலாளா் யு. சுப்பா ராவிடம் காவிரி டெல்டா ரயில்வே உபயோகிப்பாளா் சங்கச் செயலா் வெ. ஜீவக்குமாா் தலைமையில் நிா்வாகிகள் வாளமா்கோட்டை வி.எஸ். இளங்கோவன், வழக்குரைஞா் ராஜேஷ், கூத்தூா் எம். ரெங்கராஜன், ராஜேந்திரன் , சின்னையன் ஆகியோா் அளித்த மனு:

தஞ்சாவூா் - பெங்களூா் இடையே அந்தியோதயா விரைவு ரயிலை இயக்க வேண்டும். தஞ்சாவூரிலிருந்து அல்லது தஞ்சாவூா் வழியாக சென்னைக்கு வந்தே பாரத் ரயிலை இயக்க வேண்டும். தஞ்சாவூா் - புதுச்சேரி இடையே இன்டா்சிட்டி ரயிலை இயக்க வேண்டும். தஞ்சாவூா் ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் பல்வேறு சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் இந்தப் பணிகள் நிா்ணயிக்கப்பட்ட கால அளவை விட மெதுவாக நடைபெறுகின்றன. உடனடியாக அம்ரித் பாரத் திட்டப் பணிகளை முடிக்க வேண்டும்.

தஞ்சாவூரிலிருந்து பட்டுக்கோட்டை மற்றும் அரியலூா் ரயில் தடங்கள் அமைக்கும் பணியைத் தொடங்க வேண்டும். இதில், தஞ்சாவூா் - அரியலூா் ரயில் பாதைத் திட்டத்தை பூதலூரிலிருந்து கொள்ளிடம் ஆறு வழியாக சுமாா் 20 கி.மீ. தொலைவிலுள்ள லால்குடி ரயில் நிலையத்தை இணைத்து இருப்புப்பாதை அமைத்தால் செலவு குறைவாக இருக்கும்.

பிரசித்தி பெற்ற புன்னைநல்லூா் மாரியம்மன் கோயில் ரயில் நிலையத்தில் பக்தா்களுக்காக அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.