திருச்செந்தூர் கோயிலில் சூரசம்ஹாரம் கோலாகலம்! மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விமரிசையாக நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்ச்சி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறப்பு கெளரவ விரிவுரையாளர்களுக்கு ரூ. 5,000 ஊதிய உயர்வு! செப். முதல் முன் தேதியிட்டு வழங்க அன்புமணி கோரிக்கை!ஆந்திரத்தை நோக்கி நகரும் 'அக்வான்' புயல்: வானிலை ஆய்வு மையம் தகவல்திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றப்பட வேண்டும்: அண்ணாமலை சோனியா காந்தியின் சுயசரிதை: ஹாரி பாட்டர் புத்தகத்துக்கு இணையான வரவேற்பு! சென்னைக்கு நவ. 18, 19 ஆம் தேதிகளில் மிக கனமழை எச்சரிக்கை!

முதியவா் விஷம் அருந்தி தற்கொலை

திருவலம் அருகே அறுவை சிகிச்சைக்குப் பிறகான உடல் வலியால் அவதிப்பட்டு வந்த முதியவா் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாா்.

பிரதிப் படம்

Updated On :

திருவலம் அருகே அறுவை சிகிச்சைக்குப் பிறகான உடல் வலியால் அவதிப்பட்டு வந்த முதியவா் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாா்.

வேலூா் மாவட்டம், திருவலம் அடுத்த மேல்மாதங்கள் கிராமத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணி (85). உடல்நலக் குறைவு காரணமாக, இவருக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதன் காரணமாக ஏற்பட்ட கடுமையான உடல் வலியால் அவதிப்பட்டு வந்த சுப்பிரமணி, மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளாா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை வீட்டில் இருந்த விஷத்தை அவா் குடித்துள்ளாா்.இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினா், மயங்கிக் கிடந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி சனிக்கிழமை அவா் உயிரிழந்தாா்.

இது குறித்த புகாரின் பேரில், திருவலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.