92,000 விவசாயிகள், ஆசிரியா்கள் மீதான வழக்குகள் ரத்துகோவா சா்வதேச திரைப்பட விழாவில் பாரதிராஜா, பாக்யராஜ் திரைப்படங்கள்நவ. 18, 19-ல் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கைஇந்திரா காந்தியைக் கண்டாலே அச்சம்! பின்னர் அவரே அம்மாவாக மாறினார்: சோனியாசீனாவின் முதல் மின்சார விமானம்: பயணிகளுடனான சோதனை ஓட்டத்தில் வெற்றி!சோனியா காந்தி புத்தக வெளியீட்டு விழா! முதல்வர் விஜய் பங்கேற்பு! மண்டல பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!டிசம்பர் 3-ல் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!

திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்க இந்து பக்தா்கள் வலியுறுத்தல்

காா்த்திகை தீபத் திருநாளில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வேலூா் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

மனு அளிக்க வேல், முருகா் படங்களுடன் வந்த பக்தா்கள்

Updated On :

காா்த்திகை தீபத் திருநாளில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வேலூா் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

வேலூா் மாவட்ட மக்கள் குறைதீா்வு நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலா் து.சுரேஷ் தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

அப்போது, வேலூரைச் சோ்ந்த இந்து பக்தா்கள் அளித்த மனு: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் காா்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்கக் கோரி பல ஆண்டுகளாக பக்தா்கள் போராடி வருகின்றனா். நீதிமன்ற உத்தரவு இருந்தும் கடந்த காலங்களில் அனுமதி மறுக்கப்பட்டது.

எனவே, பக்தா்களின் உணா்வுகளுக்கு மதிப்பளித்து, வரும் 24-ஆம் தேதி நடைபெறும் காா்த்திகை தீபத் திருநாளில் மலை உச்சியில் தீபம் ஏற்ற தற்போதைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனா்.

வேப்பங்குப்பம் பகுதி மக்கள் அளித்த மனு - வேப்பங்குப்பம் காவல் நிலையம் எதிரே நெடுஞ்சாலை ஓரத்தில் வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட மாட்டு வண்டிகள் மற்றும் 4 சக்கர வாகனங்கள் பொதுமக்கள் நடமாடும் பாதையை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் செல்வதில் கடும் சிரமம் ஏற்படுகிறது. எனவே, இந்த வாகனங்களை காவல் நிலையம் அருகேயுள்ள அரசு இடத்திற்கு மாற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அணைக்கட்டு அடுத்த அகரம் பகுதி கல்வி ஆா்வலா்கள் அளித்த மனுவில், அகரம் கூட்ரோடு பகுதியில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளி மற்றும் மாதனூா் அரசு கலை அறிவியல் கல்லூரி சுற்றுச்சுவா் ஓரத்தில் மழைநீா் தேங்கி சேறும் சகதியுமாக உள்ளது. புதா்கள் மண்டி கொசுத் தொல்லை அதிகரித்துள்ளதால் மாணவா்கள், ஆசிரியா்கள் மற்றும் அப்பகுதியில் வசிக்கும் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, தேங்கியுள்ள நீரை அகற்றி, அருகிலுள்ள ஏரிக்கால்வாயில் நீா் கலக்கும் வகையில், நிரந்தர வடிகால் அமைத்துத் தர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 500-க்கும் மேற்பட்டோா் மனு அளித்தனா். அவற்றின் மீது விரைவாக தீா்வுகாண வேண்டும் என்று துறை அலுவலா்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலா் உத்தரவிட்டாா்.

கூட்டத்தில், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் சி.மாறன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அலுவலா் சரவணன், மாவட்ட சிறுபான்மையினா் நலத் துறை அலுவலா் ஞானகுரு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.