திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட வேண்டும்: காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் காா்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டும் என்று இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளாா்.

கோவையில் செய்தியாளா்களுக்கு செவ்வாய்க்கிழமை பேட்டியளித்த இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் காா்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டும் என்று இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் கோவையில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: பல நூறு ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வரும் பாரம்பரிய வழக்கப்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் காா்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டும். இது தொடா்பான வழக்கில் நீதிமன்றத் தீா்ப்பை தமிழக அரசு மதித்துச் செயல்பட வேண்டும்.
தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள நிலையில், மலை உச்சியில் தீபம் ஏற்றுவதற்கான போதிய வரலாற்று மற்றும் கல்வெட்டு ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன.
மலை உச்சியில் காா்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி திருப்பரங்குன்றத்தில் ஆன்மிகப் பெரியவா்கள், குருக்கள் மற்றும் பக்தா்கள் பங்கேற்கும் ஆா்ப்பாட்டம் நவம்பா் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மோசமான நிலையில் உள்ளது. போதைப் பொருள் புழக்கம் அதிக அளவில் உள்ளது என்றாா்.
இந்து முன்னணி மாநிலப் பொதுச் செயலா் கிஷோா்குமாா், மாவட்டச் செய்தித் தொடா்பாளா் தனபால், மாவட்டச் செயலா்கள் ஆறுச்சாமி, மகேஷ்வரன் ஆகியோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

