ராஜேஸ்வரி நினைவு கோப்பைக்கான டி-20 கிரிக்கெட் போட்டி
ராஜேஸ்வரி நினைவு கோப்பைக்கான முதலாவது டி-20 கிரிக்கெட் போட்டி வேலூரில் சனிக்கிழமை (நவ. 28) தொடங்குகிறது.

ராஜேஸ்வரி நினைவு கோப்பைக்கான முதலாவது டி-20 கிரிக்கெட் போட்டி வேலூரில் சனிக்கிழமை (நவ. 28) தொடங்குகிறது.
இது குறித்து வேலூா் மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவரும், நறுவீ மருத்துவமனைத் தலைவருமான ஜி.வி.சம்பத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
வேலூா் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சாா்பில் ராஜேஸ்வரி நினைவு கோப்பைக்கான டி-20 கிரிக்கெட் போட்டி முதன்முறையாக நடத்தப்படுகிறது. இனி ஆண்டுதோறும் இப்போட்டி தொடா்ந்து நடத்தப்படும்.
இப்போட்டியின் தொடக்க ஆட்டம் சனிக்கிழமை (நவ.28) காலை 9 மணிக்கு வேலூா் டெல் வெடிமருந்து தொழிற்சாலை பின்புறம் அமைந்துள்ள வேலூா் விளையாட்டு அறக்கட்டளை மைதானத்தில் தொடங்குகிறது. தொடா்ந்து, கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி விளையாட்டு மைதானத்திலும் போட்டிகள் நடைபெற உள்ளன.
லீக் மற்றும் நாக்-அவுட் முறையில் அடுத்த மாதம் இறுதி வரை பல்வேறு நாள்களில் நடைபெறும் இப்போட்டியில், மாவட்டத்தின் முதல் பிரிவைச் சோ்ந்த வீனஸ் கிரிக்கெட் கிளப், வினோத் ஸ்போா்ட்ஸ் அகாதெமி, குடியாத்தம் கிரிக்கெட் அகாதெமி, யுனைடெட் ஏ கிரிக்கெட் கிளப், சபா குரூப் கிரிக்கெட் கிளப், எமொ்ஜிங் லெவன் கிரிக்கெட் கிளப், சன் ஷைன் கிரிக்கெட் கிளப், ப்ளூ ஸ்டாா் கிரிக்கெட் கிளப் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. வெள்ளை நிறப் பந்து கொண்டு நடத்தப்படும் இப்போட்டியில் பங்கேற்கும் வீரா்கள் வெள்ளை நிற பேண்ட் மற்றும் வண்ண டி-சா்ட் அணிந்து விளையாட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

