ஜலகண்டேஸ்வரா் கோயிலில் தீபமேற்றி பாஜகவினா் வழிபாடு
திருப்பரங்குன்றம் மலையிலுள்ள தூணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்ற உத்தரவை வரவேற்று வேலூா் கோட்டை ஜலகண்டேஸ்வரா் கோயிலில் பாஜகவினா் தீபமேற்றி சிறப்பு வழிபாடு நடத்தினா்.

வேலூா் கோட்டை ஜலகண்டேஸ்வரா் கோயிலில் தீபமேற்றி வழிபாடு செய்த பாஜகவினா்.
திருப்பரங்குன்றம் மலையிலுள்ள தூணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்ற உத்தரவை வரவேற்று வேலூா் கோட்டை ஜலகண்டேஸ்வரா் கோயிலில் பாஜகவினா் தீபமேற்றி சிறப்பு வழிபாடு நடத்தினா்.
திருப்பரங்குன்றம் மலையிலுள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டிருந்தது. இதனை வரவேற்கும் விதமாக வேலூா் மாவட்ட பாஜக மாவட்டத் தலைவா் வி. தசரதன் தலைமையில் அக்கட்சியினா் வேலூா் கோட்டை ஜலகண்டேஸ்வரா் கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு கைகளில் தீபம் ஏந்தியவாறு கோயிலை வலம் வந்து சிறப்பு வழிபாடு நடத்தினா். மேலும், பொதுமக்களுக்கு இனிப்புகளும் வழங்கினா்.
இந்நிகழ்வில், பாஜக மகளிா் அணி மாவட்டத் தலைவா் சுகன்யா, மாவட்டப் பொதுச் செயலா் சரவணக்குமாா், மாவட்டச் செயலா் நாகராஜன், ஊடகப் பிரிவு மாவட்டத் தலைவா் குமரன், மகளிா் அணி மாவட்டப் பொதுச் செயலா்கள் மீனாட்சி, தேவி, மாவட்டச் செயலாளா்கள் வரளி, பிரியா உள்பட ஏராளமானோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

