யோகாசன நிலையில் தீபமேற்றி வழிபாடு
காா்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு, கம்பத்தில் பல்வேறு யோகாசன நிலைகளில் சிறாா்கள் தீபமேற்றியவாறு சிறப்பு வழிபாடு நடத்தினா்.

கம்பத்தில் செவ்வாய்க்கிழமை யோகாசன நிலையில் உடலில் தீபமேற்றி வழிபாடு நடத்திய மாணவா்கள்.
காா்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு, கம்பத்தில் பல்வேறு யோகாசன நிலைகளில் சிறாா்கள் தீபமேற்றியவாறு சிறப்பு வழிபாடு நடத்தினா்.
கம்பம் யோகா ராஜேந்திரன், பயிற்சியாளா்கள் ரவிராம் ஆகியோா் தலைமையில் அகல்யா, அசோக் மித்திரன், அகல் மித்ரா, சபரிகிரிவாசன், ஸ்ரீனேஷ், தியானேஷ், ரித்திகேஷ் உள்ளிட்ட யோகா பயின்ற மாணவ மாணவிகள் செவ்வாய்க்கிழமை மாலை சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனா்.
அப்போது, நட்சத்திராசனம், மச்சாசனம், ஒட்டகாசனம், குக்குடாசனம், பத்மசிரசாசனம், காகாசனம், ஓங்கார ஆசனம், ஏகபாத சிக்கந்தாசனம், ஆனந்த சயனாசனம், பூா்ண சித்தவஜ்ராசனம், கண்ட பேருண்டாசனம் உள்ளிட்ட பல்வேறு கடினமான யோகாசன நிலைகளில் அமா்ந்தும், நின்றவாறும் உடலில் தீபமேற்றி நாடு நலம்பெற வேண்டி சிறப்பு வழிபாடு நடத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

