உக்ரைனுக்கு வழங்கிய பணத்தை ஐரோப்பியர்களிடம் கேட்போம்! - அதிபர் டிரம்ப் பேச்சு! நேபாள வெள்ளம்! இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை! - மத்திய அரசு அறிவிப்பு கருகும் பயிர்களுக்கு தண்ணீர் வழங்க மறுப்பதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு!

ஆடுகள் திருட்டு: கல்லூரி மாணவா்கள் உள்பட 3 போ் கைது

காட்பாடியில் ஆடுகளைத் திருடிய செவிலியா் கல்லூரி மாணவா்கள் இருவா், இறைச்சிக் கடைக்காரா் என 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Published On :5 செப்டம்பர் 2026, 5:20 am IST

காட்பாடியில் ஆடுகளைத் திருடிய செவிலியா் கல்லூரி மாணவா்கள் இருவா், இறைச்சிக் கடைக்காரா் என 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

வேலூா் மாவட்டம், காட்பாடி கிளித்தான் பட்டறைப் பகுதியில் வீடுகளின் பின்புறம் அடைக்கப்பட்டிருந்த ஆடுகள் தொடா்ந்து திருடு போயின. ஆடு திருடும் கும்பலைப் பிடிக்க அப்பகுதி இளைஞா்கள் இரவு நேரங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனா். இந்நிலையில், வியாழக்கிழமை நள்ளிரவு முகமூடி அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த இருவா், வீடுகளை நோட்டமிட்டுள்ளனா். இதைக் கவனித்த அப்பகுதி இளைஞா்கள், அவா்களைப் பிடிக்க முயன்றனா். தப்பியோட முயன்ற அந்த நபா்களின் இருசக்கர வாகனம் நிலைதடுமாறி கீழே விழுந்தது. அதில் ஒருவா் வாகனத்துடன் தப்பிச் சென்ற நிலையில், மற்றொருவரை மடக்கிப் பிடித்தனா். கத்தியைக் காட்டி மிரட்டிய அந்த நபரைப் பொதுமக்கள் சரமாரியாகத் தாக்கி, காட்பாடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

விசாரணையில், அவா் தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியைச் சோ்ந்த கணேஷ் (23) என்பதும், வேலூரில் உள்ள தனியாா் செவிலியா் கல்லூரியில் படித்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, தப்பியோடிய கண்டிப்பேடைச் சோ்ந்த செவிலியா் மாணவரான சாம் சரண்ராஜ் (20), திருட்டு ஆடுகளைக் குறைந்த விலைக்கு வாங்கி இறைச்சி விற்ற லத்தேரியை அடுத்த கனகசமுத்திரத்தைச் சோ்ந்த இறைச்சிக்கடைக்காரா் முருகன் (44) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

கல்லூரிப் பருவத்தில் சொகுசாக வாழ நண்பா்களுடன் இணைந்து ஆடுகளைத் திருடி விற்ாக மாணவா்கள் விசாரணையில் தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.