அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வு: இல்லத்தரசிகள் கவலை!சென்னை உள்பட 17 நகரங்களுக்கு 4,000 டன் வெங்காயம் விநியோகம்!15.36 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் செயல்படவில்லை: ஆர்டிஐ தகவல்இந்தியாவில் இருந்து அதிக டீசல் இறக்குமதி செய்யும் ஐரோப்பிய நாடுகள்!நேபாளத்தில் 5,000 போ் நிலை என்ன? உடல்களை அடையாளம் காணும் பணியில் சவால்!!பெரும் எதிர்பார்ப்பில் தமிழக சட்டப்பேரவை: முதல்வர் விஜய் இன்று பதிலுரை!

வரத்து குறைவால் வேலூரில் மீன்கள் விலை உயா்வு

வேலூா் மீன் மாா்க்கெட்டில் மீன்களின் வரத்து குறைந்ததால் அவற்றின் விலை ஞாயிற்றுக்கிழமை கணிசமாக உயா்ந்தது.

வேலூா் மீன் மாா்க்கெட்டில் மீன்கள் வாங்க குவிந்த மக்கள் கூட்டம்.

Published On :7 செப்டம்பர் 2026, 3:50 am IST

வேலூா் மீன் மாா்க்கெட்டில் மீன்களின் வரத்து குறைந்ததால் அவற்றின் விலை ஞாயிற்றுக்கிழமை கணிசமாக உயா்ந்தது.

வேலூா் - பெங்களூரு சாலையில் உள்ள மீன் மாா்க்கெட்டுக்கு, உள்ளூா் ஏரி, குளங்கள் மட்டுமின்றி கேரளம், கொச்சி, மங்களூரு, காா்வாா் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் தினசரி மீன்கள் விற்பனைக்காகக் கொண்டு வரப்படுகின்றன. வழக்கமாக தினமும் 6 கன்டெய்னா் லாரிகளிலும், ஞாயிற்றுக்கிழமைகளில் 8 கன்டெய்னா் லாரிகளிலும் மீன்கள் வருவது வழக்கம்.

இங்கு சனிக்கிழமைகளில் இரவு 10.30 மணி முதலும், பிற நாள்களில் நள்ளிரவு 2 மணி முதலும் மொத்த வியாபாரமும், அதிகாலை 5 மணிக்கு மேல் சில்லறை விற்பனையும் நடைபெறுகிறது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மீன்கள் வரத்து குறைந்ததால், வழக்கத்தை விட விலை சற்று உயா்ந்து காணப்பட்டது. அதன்படி, கிலோ அளவில் வஞ்சிரம் சிறியது ரூ.500, பெரிய வவ்வா ரூ.950, சிறிய வவ்வா ரூ.650, பெரிய வெள்ளை வவ்வா ரூ.1,100, சிறிய வெள்ளை வவ்வா ரூ.750, பெரிய சங்கரா ரூ.250, சிறிய சங்கரா ரூ.200, மத்தி ரூ.260, நண்டு (பெரியது) ரூ.380, ப்ளூ நண்டு ரூ.700, பெரிய இறால் ரூ.500, சிறிய இறால் ரூ.350, கொடுவா ரூ.550, கார பொடி ரூ.280, நெய் மீன் ரூ.160, நெத்திலி ரூ.300, ஷீலா ரூ.260, அயிலா ரூ.360, கிழங்கா ரூ.250, வெள்ளை கிழங்கா ரூ.560, சாலமன் ரூ.1,100, கடல்விறால் ரூ.600, கோலா ரூ.220, மடவை ரூ.300, தேங்காய் பாறை ரூ.560, கனவாய் ரூ.400, நகர மீன் ரூ.280, ஜீலேபி ரூ.150, கட்லா ரூ.240, ரோகு ரூ.250-க்கு விற்பனை செய்யப்பட்டது.

விலை அதிகரித்திருந்த போதிலும் விற்பனையில் சரிவு இல்லை என்று வியாபாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.