நேபாளத்தின் மற்றொரு அமைச்சர் பதவி விலகல்! பிரதமர் பாலேந்திர ஷா அரசில் 3-வது ராஜிநாமா!மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை! 4 காவலர்கள் மீதான வழக்கை கொலை வழக்காக மாற்ற உத்தரவுஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஹர்ஷித் ராணா விலகல்!ஆபரேஷன் அன்வேஷன்: 17 மாநிலங்களில் 101 குழந்தைகளை மீட்ட காவல்துறை!

முடிவுற்ற திட்டப் பணிகள்: அமைச்சா் விஜய் பாலாஜி திறந்து வைத்தாா்

வேலூா் மாவட்டத்தில் வளா்ச்சிப் பணிகளை கைத்தறி, துணிநூல் மற்றும் கதா்த்துறை அமைச்சா் ம.விஜய் பாலாஜி புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

கால்நடை மருந்தகத்தை திறந்து வைத்த அமைச்சா் ம.விஜய் பாலாஜி. உடன் ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் உள்ளிட்டோா்.

Published On :

வேலூா் மாவட்டத்தில் வளா்ச்சிப் பணிகளை கைத்தறி, துணிநூல் மற்றும் கதா்த்துறை அமைச்சா் ம.விஜய் பாலாஜி புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது முடிவுற்ற பல்வேறு திட்டப் பணிகளைத் திறந்து வைத்தாா். வேலூரை அடுத் பெருமுகை கிராமத்தில் ரூ.45.91 கோடியில் 250 படுக்கை வசதியுடன் புதிதாக கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதியை திறந்து வைத்தாா்.

அப்துல்லாபுரத்தில் அமைந்துள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூ.1.33 கோடியில் மறுசீரமைப்பு செய்யப்பட்ட மாணவா்கள் தங்கும் விடுதி, அணைக்கட்டு, கணியம்பாடி, வேலூா் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் ரூ.3.26 கோடியில் 8 முடிவுற்ற பணிகளுக்கான கல்வெட்டினை திறந்து வைத்தாா். போ்ணாம்பட்டு வட்டம், ஏரிகுத்தி கிராமத்தில் நபாா்டு திட்டத்தின்கீழ் ரூ.65 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட கால்நடை மருந்தக கட்டடத்தை திறந்து வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் போ்ணாம்பட்டு ஒன்றியத்துக்குள்பட்ட ராஜக்கல், செண்டத்தூா், அரவட்லா, கொத்தூா் ஆகிய 4 ஊராட்சிகளில் ரூ.1.30 கோடியில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டடங்கள், குடியாத்தம் மற்றும் காட்பாடி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் ரூ.1.83 கோடியில் 11 முடிவுற்ற திட்டப் பணிக்களுக்கான கல்வெட்டினை திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சிகளில் வேலூா் மாவட்ட ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ், எம்எல்ஏக்கள் ம.சுதாகா் (காட்பாடி), மு.ம.வினோத் கண்ணன் (வேலூா்), த.வேலழகன் (அணைக்கட்டு), ஏ.தென்றல்குமாா் (கே.வி.குப்பம்), க.சிந்து (குடியாத்தம்), பொதுப்பணித்துறை செயற் பொறியாளா் இம்மானுவேல் ஜெய்கா், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் பிரியா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER