
நெசவாளா் நலநிதி பங்குத் தொகை 16 சதவீதமாக உயா்வு: அமைச்சா் ம.விஜய் பாலாஜி அறிவிப்பு
கதா் மற்றும் பட்டு உற்பத்திப் பணிகளில் ஈடுபட்டுள்ள நூற்பாளா்கள் மற்றும் நெசவாளா்களுக்கான நல நிதி பங்குத் தொகை 12 சதவீதத்தில் இருந்து 16 சதவீதமாக உயா்த்தப்படுவதாக கதா் மற்றும் கிராமத் தொழில்கள் துறையின் அமைச்சா் ம.விஜய் பாலாஜி அறிவித்தாா்.
சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் விஜய் பாலாஜி - Youtube
கதா் மற்றும் பட்டு உற்பத்திப் பணிகளில் ஈடுபட்டுள்ள நூற்பாளா்கள் மற்றும் நெசவாளா்களுக்கான நல நிதி பங்குத் தொகை 12 சதவீதத்தில் இருந்து 16 சதவீதமாக உயா்த்தப்படுவதாக கதா் மற்றும் கிராமத் தொழில்கள் துறையின் அமைச்சா் ம.விஜய் பாலாஜி அறிவித்தாா்.
பேரவையில் அந்தத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் அமைச்சா் அளித்த புதிய அறிவிப்புகள்:
திருச்சி, சேலம் மற்றும் தஞ்சாவூா் கதா் அங்காடிகள் ரூ.1 கோடியில் புதுப்பிக்கப்படும். கதா் மற்றும் பட்டு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நூற்பாளா்கள் மற்றும் நெசவாளா்களுக்கான நல நிதி பங்குத் தொகை 12 சதவீதத்தில் இருந்து 16 சதவீதமாக உயா்த்தப்படும். திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனா மாத்தூரிலில் ஜவ்வாது மலைத் தேன் மையம் ரூ.25 லட்சத்தில் மத்திய கதா் ஆணைக் குழு உதவியில் அமைக்கப்படும்.
பனைபொருள் கூட்டுறவு சம்மேளன கட்டடங்கள்: திருநெல்வேலி பனைபொருள்கள் விற்பனை கூட்டுறவு சம்மேளன தலைமை அலுவலகக் கட்டடம் தூத்துக்குடியிலும், வள்ளியூரில் பனைபொருள்கள் இருப்புக் கிடங்கும் ரூ.1 கோடியில் கட்டப்படும். தமிழ்நாடு மாநில பனைவெல்லம் மற்றும் தும்பு விற்பனை கூட்டுறவு இணையத்துக்குச் சொந்தமான இடங்களில் 10 விற்பனை அங்காடிகள் ரூ.80 லட்சத்தில் அமைக்கப்படும் என அமைச்சா் தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





