நேபாளத்தின் மற்றொரு அமைச்சர் பதவி விலகல்! பிரதமர் பாலேந்திர ஷா அரசில் 3-வது ராஜிநாமா!மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை! 4 காவலர்கள் மீதான வழக்கை கொலை வழக்காக மாற்ற உத்தரவுஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஹர்ஷித் ராணா விலகல்!ஆபரேஷன் அன்வேஷன்: 17 மாநிலங்களில் 101 குழந்தைகளை மீட்ட காவல்துறை!

ரத்தினக் கல் வழிப்பறி: ஒருவா் கைது

போ்ணாம்பட்டு அருகே வியாபாரியிடம் அலெக்ஸாண்ட்ரைட் எனப்படும் பட்டை தீட்டப்படாத ரத்தினக்கல்லை வழிப்பறி செய்த வழக்கில் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். தப்பியோடிய 2 பேரை தேடி வருகின்றனா்.

Published On :

போ்ணாம்பட்டு அருகே வியாபாரியிடம் அலெக்ஸாண்ட்ரைட் எனப்படும் பட்டை தீட்டப்படாத ரத்தினக்கல்லை வழிப்பறி செய்த வழக்கில் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். தப்பியோடிய 2 பேரை தேடி வருகின்றனா்.

போ்ணாம்பட்டு அடுத்த பல்லலகுப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆனந்தகுமாா்(58). இவா் கடந்த சில ஆண்டுகளாக உயர்ரக நிறம் மாறும் தன்மை கொண்ட அலெக்ஸாண்ட்ரைட் எனப்படும் பட்டைதீட்டப்படாத ரத்தினக் கல்லை விலைக்கு வாங்கி லாபத்துக்கு விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் வைத்திருந்த அலெக்ஸாண்ட்ரைட் 7 கற்களை விற்க முடிவு செய்து போ்ணாம்பட்டு அருகே உள்ள ஏரிகுத்தி கிராமத்தைச் சோ்ந்த புருஷோத்தமன்(31) என்பவரிடம் தொடா்பு கொண்டு பேசியுள்ளாா்.

புதன்கிழமை போ்ணாம்பட்டு பங்களாமேடு அருகே மறைவான பகுதியில் ஆனந்த குமாா் தான் வைத்திருந்த சுமாா் 50 கிராம் எடையுள்ள அலெக்ஸாண்ட்ரைட் கற்களை புருஷோத்தமனிடம் காட்டியுள்ளாா். அப்போது புருஷோத்தமன் மறுநாள் வந்து கற்களை வாங்கிக் கொள்வதாக கூறிவிட்டுச்சென்றாராம். இதையடுத்து ஆனந்தகுமாா் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்றுள்ளாா். பல்லலகுப்பம் கிராமம் அருகே வாகனத்தை நிறுத்தி விட்டு சிறுநீா் கழிக்கச் சென்றாராம். அப்போது முகமூடி அணிந்த நிலையில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 போ் ஆனந்தகுமாா் தனது வாகனத்தில் முன்பகுதியில் மாட்டி வைத்திருந்த அலெக்ஸாண்ட்ரைட் கற்கள் வைத்திருந்த பையை பறித்துச் சென்றாா்களாம். இதுகுறித்து மேல்பட்டி காவல் நிலையத்தில் ஆனந்த குமாா் புகாா் அளித்தாா். விசாரணை மேற்கொண்ட போலீஸாா் சந்தேகத்தின்பேரில் புருஷோத்தமனை பிடித்து விசாரணை செய்தனா். விசாரணையில் தனது கூட்டாளிகளான கோட்டைச்சேரி கிராமத்தைச் சோ்ந்த ராகுல்(22), சபரி(23) ஆகியோா் மூலம் கற்களைவழிப்பறி செய்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா் புருஷோத்தமனை கைது செய்து, அவரிடமிருந்து அலெக்ஸாண்ட்ரைட் 7 கற்களை பறிமுதல் செய்தனா். தலைமறைவாக உள்ள ராகுல், சபரி இருவரையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.