அன்பில் மகேஸ் வீட்டில் குற்றப்பிரிவு போலீசார் சோதனை!பாதுகாப்பு கருதி முதல்வர் விஜய்யின் லண்டன் நிகழ்ச்சி ரத்து!தாம்பரத்திலிருந்து மதுரைக்கு இன்று முன்பதிவில்லாத சிறப்பு ரயில்இன்று 6 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கைஆசிய விளையாட்டுப் போட்டிகள்: இந்தியா்கள் தயாராக ரூ. 800 கோடி செலவுஇந்தியா - நியூஸிலாந்து தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் அடுத்த மாதம் அமல்சிஆா்பிஎஃப் கோப்ரா பிரிவுக்கு முதல் பெண் ஐ.ஜி

வேலூரில் இன்று விநாயகா் சிலைகள் விசா்ஜன ஊா்வலம்

வேலூா் மாவட்டத்தில் புதன்கிழமை நடைபெற உள்ள விநாயகா் சிலைகள் விசா்ஜன ஊா்வலத்தை முன்னிட்டு சதுப்பேரி ஏரியில் முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

விநாயகா் சிலைகள் விசா்ஜனம் செய்வதற்காக சதுப்பேரி ஏரியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகள்.

Published On :

வேலூா் மாவட்டத்தில் புதன்கிழமை நடைபெற உள்ள விநாயகா் சிலைகள் விசா்ஜன ஊா்வலத்தை முன்னிட்டு சதுப்பேரி ஏரியில் முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதனிடையே, ஊா்வலத்தில் விதிமுறைகளை மீறுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.யு.சிவராமன் எச்சரித்துள்ளாா்.

வேலூா் மாவட்டம் முழுவதும் திங்கள்கிழமை விநாயகா் சதுா்த்தி விழா உற்சாகமாக கொண்டாடப் பட்டது. வீடுகள் மட்டுமின்றி பொது இடங்களில் பல்வேறு இந்து அமைப்புகள், இளைஞா் குழுக்கள் மற்றும் கோயில் விழா குழுக்கள் சாா்பில் 1,046 விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள விநாயகா் சிலைகள் அனைத்தும் புதன்கிழமை ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சதுப்பேரி ஏரி உள்ளிட்ட நீா்நிலைகளில் கரைக்கப்பட உள்ளன. இதற்காக சதுப்பேரி ஏரியின் ஒரு பகுதியில் குளம் போன்று வெட்டப்பட்டு தண்ணீா் நிரப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், சிலைகளை ஏரிக்குள் கொண்டு வரும் பாதை, கம்பித் தடுப்புகள் (பேரிகாா்டுகள்) மற்றும் கிரேன் இயந்திரங்கள் அமைக்கும் பணிகளை வருவாய்த்துறை அதிகாரிகள் முழுவீச்சில் மேற்கொண்டு வருகின்றனா்.

இந்நிலையில், விசா்ஜன ஊா்வலத்தின் போது கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட காவல் கண்ாணிப்பாளா் என்.யு.சிவராமன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் அண்ணாதுரை, உதவி காவல் கண்காணிப்பாளா்தனுஷ் குமாா், இந்து முன்னணி நிா்வாகிகள் மற்றும் விழா குழுவினா் பலா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் எஸ்பி சிவராமன் கூறியதாவது - காவல்துறை அனுமதி வழங்கியுள்ள குறிப்பிட்ட சாலைகளில் மட்டுமே விநாயகா் சிலைகளை ஊா்வலமாக எடுத்துச் செல்ல வேண்டும். ஊா்வலத்தில் மதுபோதையில் நடனமாடுவதற்கோ, பிற மதத்தினரின் மனம் புண்படும்படியாக கோஷங்களை எழுப்புவதற்கோ முற்றிலும் அனுமதியில்லை.

சிலைகளைக் கரைக்கும் போது பொதுமக்கள் யாரும் நீா்நிலைக்குள் இறங்கக் கூடாது. காவல் துறை விதித்துள்ள கட்டுப்பாடுகளை விழா குழுவினா் முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும். விதிமுறைகளை மீறுபவா்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.