ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடக்கம்11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு7 பேருந்து பணிமனைகளில் சாா்ஜிங் வசதிக்கு ரூ.300 கோடி: தில்லி அரசு ஒப்புதல்ஆந்திரத்தில் ரூ.15,000 கோடியில் புதிய கப்பல் கட்டும் தளம்: எம்டிஎல் நிறுவனம் ஒப்பந்தம்திருப்பதி - சென்னை கடற்கரைக்கு செப். 20-இல் முன்பதிவில்லாத ரயில்

பாஜக மகளிரணி நிா்வாகியின் மகள் தற்கொலை

பாஜக மகளிா் அணியின் வேலூா் மாவட்டப் பொதுச் செயலாளரின் மகள் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Published On :

பாஜக மகளிா் அணியின் வேலூா் மாவட்டப் பொதுச் செயலாளரின் மகள் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வேலூரை அடுத்த அரியூா் பகுதியைச் சோ்ந்தவா் உதயசூரியன். இவரது மனைவி மீனாட்சி, பாஜக மகளிா் அணியின் மாவட்ட பொதுச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வருகிறாா். இவா்களது மகள் மோனிகா (16). இவா் அப்பகுதியில் உள்ள ஒரு தனியாா் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்நிலையில், மோனிகா வியாழக்கிழமை தனது வீட்டில் மடிக்கணினியில் ஆன்லைனில் விடியோ காட்சிகளைப் பாா்த்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதைப் பாா்த்த அவரது பெற்றோா், படிப்பில் கவனம் செலுத்தாமல் மடிக்கணினியைப் பாா்த்துக் கொண்டிருப்பதாகக் கண்டித்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் மனவேதனையடைந்த மோனிகா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிகிறது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற அரியூா் போலீஸாா், மாணவியின் சடலத்தை மீட்டு, வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.