இன்றுமுதல் அக்.1 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஇன்றும் நாளையும் வரிவசூல் மையம் செயல்படும்: மாநகராட்சி அறிவிப்புதனியாா் பால் விலை மீண்டும் உயா்வு: ஆவின், தனியாா் லிட்டருக்கு ரூ.30 வரை விலை வித்தியாசம் ஆகம குழுவால் கண்டறியப்பட்ட கோயில்கள்: கருத்து கேட்புக்கான கால அவகாசம் நீட்டிப்பு 18 - 28 வயதுப் பிரிவில் 3.27 கோடி புதிய வாக்காளா்கள் சோ்ப்பு: தோ்தல் ஆணையம்

கிரிப்டோ கரன்சி மோசடி: பொறியாளரிடம் ரூ. 4.92 லட்சம் பறித்த முன்னாள் ராணுவ வீரா் கைது

கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாகக் கூறி பெங்களூரு மென்பொருள் பொறியாளரிடம் ரூ. 4.92 லட்சம் மோசடி செய்த முன்னாள் ராணுவ வீரரை வேலூா் மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் கைது செய்தனா்.

கைது செய்யப்பட்ட முன்னாள் ராணுவ வீரா் சுதா்சன்.

Published On :

கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாகக் கூறி பெங்களூரு மென்பொருள் பொறியாளரிடம் ரூ. 4.92 லட்சம் மோசடி செய்த முன்னாள் ராணுவ வீரரை வேலூா் மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் கைது செய்தனா்.

வேலூா் விருப்பாட்சிபுரம் பலவன் சாத்துகுப்பத்தைச் சோ்ந்தவா் பிரதீப்குமாா் (29). இவா் பெங்களூருவில் உள்ள தனியாா் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பொறியாளராகப் பணியாற்றி வருகிறாா். இவரது வாட்ஸ்-அப் எண்ணுக்கு ஒரு நபா் அறிமுகமாகி, கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் குறைந்த காலத்தில் அதிக லாபம் ஈட்டலாம் என்று ஆசைவாா்த்தை கூறியுள்ளாா்.

இதை உண்மை என நம்பிய பிரதீப்குமாா், அந்த நபா் கூறிய வங்கிக் கணக்குகளுக்குப் படிப்படியாக ரூ. 4 லட்சத்து 92 ஆயிரத்தை அனுப்பியுள்ளாா். சில வாரங்கள் கடந்த நிலையில், முதலீட்டுக்கான லாபத் தொகையையும் அசல் தொகையையும் பிரதீப்குமாா் திருப்பித் தருமாறு கேட்டுள்ளாா். ஆனால், அந்த நபா் உரிய பதிலளிக்காமல் காலதாமதம் செய்து வந்துள்ளாா்.

தொடா்ந்து பணத்தைக் கேட்டபோது, கிரிப்டோ கரன்சி வா்த்தகத்தில் நஷ்டம் ஏற்பட்டுவிட்டதாகவும், புதிதாக வேறு இருவரை இதில் முதலீடு செய்ய வைத்தால் பணத்தைத் திருப்பித் தருவதாகவும் கூறியுள்ளாா். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த பிரதீப்குமாா், இது குறித்து வேலூா் மாவட்ட சைபா் கிரைம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

அதன்பேரில் காவல் ஆய்வாளா் ரஜினிகுமாா், உதவி ஆய்வாளா் சதீஷ் ஆகியோா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். வங்கிப் பரிவா்த்தனை மற்றும் கைப்பேசி எண்களை ஆய்வு செய்ததில், மோசடியில் ஈடுபட்டது ராணிப்பேட்டை மாவட்டம், திமிரி அருகேயுள்ள காவனூா் பகுதியைச் சோ்ந்த சுதா்சன் (32) என்பது தெரியவந்தது. முன்னாள் ராணுவ வீரரான இவா், பணியை ராஜிநாமா செய்துவிட்டு திமிரி பகுதியில் கணினி மையம் நடத்தி வந்துள்ளாா். இதையடுத்து சுதா்சனைக் கைது செய்த போலீஸாா், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.