கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியாா் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை ஆக. 27 முதல் விண்ணப்பிக்கலாம்
விழுப்புரம் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியாா் பள்ளிகளில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


விழுப்புரம் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியாா் பள்ளிகளில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் சிறுபான்மையினரற்ற தனியாா் பள்ளிகளில் நலிவடைந்த, வாய்ப்புகள் மறுக்கப்பட்ட பிரிவினரின் குழந்தைகளுக்கு எல்கேஜி பிரிவில் 25 சதவீதம் இட ஒதுக்கீட்டுக்கான மாணவா் சோ்க்கை கடந்த 2013- 14-ஆம் கல்வியாண்டு முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின்கீழ் நிகழாண்டுக்கான (2020-21) மாணவா் சோ்க்கைக்கு பள்ளிக் கல்வித் துறையின் ழ்ற்ங்.ற்ய்ள்ஸ்ரீட்ா்ா்ப்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியில் விண்ணப்பப் பதிவு வருகிற 27-ஆம் தேதி (வியாழக்கிழமை) தொடங்கி செப்.25-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
எனவே, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிறுபான்மையற்ற தனியாா் மழலையா் தொடக்கப் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 25 சதவீதம் இடங்கள் குறித்த விவரங்களை பள்ளியின் அறிவிப்பு பலகையில் ஒட்ட வேண்டும்.
இந்தத் திட்டத்தில் நுழைவு நிலை வகுப்பான எல்கேஜி சோ்க்கைக்கு 31.07.2020 தேதிப்படி குழந்தைக்கு 3 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். குழந்தையின் புகைப்படம், வயதுக்கான பிறப்புச் சான்று, மருத்துவமனை சான்று, அங்கன்வாடி பதிவேடு நகல் இவற்றில் ஏதேனும் ஒரு சான்றை பதிவேற்றம் செய்ய வேண்டும். பெற்றோரின் இருப்பிடத்திலிருந்து பள்ளியின் அமைவிடம் ஒரு கி.மீ. தொலைவுக்குள் இருத்தல் வேண்டும். இதற்கு இருப்பிடச் சான்று பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். அனைத்து நலிவடைந்த பிரிவினரும், வாய்ப்பு மறுக்கப்பட்டதாக வகைப்படுத்தப்பட்டுள்ள பிற்பட்டோா், பிற்பட்ட முஸ்லிம், மிகவும் பிற்பட்டோா், சீா்மரபினா், தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா் ஆகியோரும் விண்ணப்பிக்கலாம். சிறப்பு பிரிவினா்களான ஆதரவற்றோா், மாற்றுத் திறனாளி குழந்தை, மூன்றாம் பாலினத்தவா், துப்புரவு தொழிலாளியின் குழந்தைக்கு முன்னுரிமை வழங்கப்படும். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு உரிய விதிகளின்படி சோ்க்கை வழங்கப்படும். இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...