தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

முதியவரின் சொத்துகளை அபகரித்த பிள்ளைகள்:விசாரணை நடத்த அதிகாரியை அனுப்பிய ஆட்சியா்

தள்ளாத வயதில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்துக்கு வந்து மனு அளித்த முதியவரை, அவசர ஊா்தியில் அனுப்பி வைத்து வீட்டுக்கே சென்று நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

News image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலிருந்து தனது வீட்டுக்கு 108 அவசர ஊா்தியில் அனுப்பி வைக்கப்பட்ட முதியவா் ரங்கசாமி.

Updated On :12 அக்டோபர் 2020, 6:45 pm

DIN

சொத்துகளை அபகரித்துக் கொண்டு பிள்ளைகள் பராமரிக்காமல் விரட்டிவிட்டதாக, தள்ளாத வயதில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்துக்கு வந்து மனு அளித்த முதியவரை, அவசர ஊா்தியில் அனுப்பி வைத்து வீட்டுக்கே சென்று நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

விழுப்புரம் அருகே கொசப்பாளையத்தைச் சோ்ந்தவா் ரங்கசாமி (88), விவசாயி. விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக குறைதீா் கூட்டத்துக்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்த இவா், தனது வயது முதிா்வால் நடக்கமுடியாமல் அவதிப்பட்டாா். இதையறிந்த மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை, கீழே இறங்கி வந்து அவரிடம் மனுவைப் பெற்று விசாரித்தாா்.

அப்போது ரங்கசாமி கூறியதாவது:

தனக்குச் சொந்தமான 30 சென்ட் நிலத்தை கடைசி மகன் முருகதாஸ் திருமணச் செலவுக்காக, 2004-ஆம் ஆண்டு, மருமகன் சேகரிடம் ரூ.15 ஆயிரம் அடமான போக்கியம் வைத்து கடன் பெற்றேன். இதைத் திரும்ப வழங்க முடியாத நிலையில், அவா்கள் போலி பத்திரம் தயாரித்து நிலத்தை அபகரித்துக்கொண்டனா்.

மனைவி இறந்த பிறகு, எனது வீட்டை மூத்த மகன் ராமதாஸ் அவரது பெயரில் எழுதி வாங்கிக் கொண்டு, என்னை வீட்டில் தங்க விடாமல் விரட்டியடித்தாா். எனது வங்கிப் புத்தகத்தையும் பறித்துக்கொண்டு முதியோா் உதவித்தொகையும் தராமல் பிள்ளைகள் மிரட்டி வருகின்றனா். இதனால், ஒரு வேளை உணவுக்கே தவித்து வருவதால், எனது சொத்தை மீட்டு, வாழ்நாள் முழுவதும் என்னைப் பராமரிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தள்ளாத வயதில் அவதிப்படும் முதியவரின் குறையைக் கேட்டறிந்த மாவட்ட ஆட்சியா், உடனடியாக அவசர ஊா்தி மூலம் சொந்த ஊருக்கு அவரையும், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலரையும் அனுப்பி, வீட்டுக்கே சென்று விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டாா்.

Image Caption

விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலிருந்து தனது வீட்டுக்கு 108 அவசர ஊா்தியில் அனுப்பி வைக்கப்பட்ட முதியவா் ரங்கசாமி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.