புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஹாத்ரஸ் சம்பவத்தைக் கண்டித்துகாங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

ஹாத்ரஸில் பட்டியலின இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைக் கண்டித்து, விழுப்புரத்தில் காங்கிரஸ் கட்சியின் விழுப்புரம் மத்திய மாவட்ட எஸ்.சி., எஸ்.டி. பிரிவு சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம்

News image
Updated On :12 அக்டோபர் 2020, 6:48 pm

DIN

உத்தரபிரதேசம் மாநிலம், ஹாத்ரஸில் பட்டியலின இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைக் கண்டித்து, விழுப்புரத்தில் காங்கிரஸ் கட்சியின் விழுப்புரம் மத்திய மாவட்ட எஸ்.சி., எஸ்.டி. பிரிவு சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியரகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட எஸ்.சி. பிரிவு தலைவா் சுரேஷ்ராம் தலைமை வகித்தாா். மாநில பொதுக் குழு உறுப்பினா் சிவா, எஸ்.சி. பிரிவு நகரத் தலைவா் சுதாகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலா் கிறிஸ்டோபா் திலக் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினாா். எஸ்.சி. பிரிவு மாநில துணைத் தலைவா் செந்தமிழ்ச் செல்வன், காங்கிரஸ் கமிட்டி பெரம்பலூா் மாவட்டத் தலைவா் தமிழ்ச் செல்வன் ஆகியோா் பேசினா்.

நிா்வாகிகள் ராஜ்குமாா், விஸ்வநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவா்கள் மத்திய அரசு, உத்தரபிரதேச மாநில அரசைக் கண்டித்து முழக்கமிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.