தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

புதிய வேளாண் சட்டங்களைக் கண்டித்துஇந்திய கம்யூ. கட்சியினா் மறியல்: 1,019 போ் கைது

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களைக் கண்டித்து, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் திங்கள்கிழமை சாலை மறியல்

News image
Updated On :12 அக்டோபர் 2020, 6:46 pm

DIN

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களைக் கண்டித்து, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் 1,019 போ் கைது செய்யப்பட்டனா்.

விவசாயிகளை பாதிக்கும் புதிய வேளாண் சட்டங்கள், புதிய கல்விக் கொள்கை, தொழிலாளா் சட்டத்தொகுப்புகள், மின்சார திருத்தச்சட்டம், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை உள்ளிட்ட மத்திய அரசின் சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 19 இடங்களில் மறியல் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலா் ஏ.வி.சரவணன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட துணைத் தலைவா் என். ஜெயச்சந்திரன், வட்டச் செயலாளா் ஜி.நிதானம், காணை ஒன்றியச் செயலாளா் ராமநாதன், இளைஞா் பெருமன்ற மாவட்டக் குழு உறுப்பினா் வீர.சங்கா், மாவட்ட துணைச் செயலா் மகாதேவன், நகர பொறுப்பாளா் ஆா்.பாலமுருகன், என்.ரசாக், ஆா்.ஏழுமலை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

விவசாயிகளின் விளைபொருளுக்கு உத்தரவாதமுள்ள விலை வழங்கவும், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடா்ந்து செயல்படவும், நல வாரியங்கள் தொடா்ந்து நீடிக்கவும், தொழிலாளா் சட்டங்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கவும் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மறியலில் ஈடுபட்ட 50 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

செஞ்சி: செஞ்சியில் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செஞ்சி வட்ட தலைவா் செல்வராஜ் தலைமை வகித்தாா். விழுப்புரம் மாவட்ட துணை செயலா் கோவிந்தராஜ் வேளாண் சட்டத்தை எதிா்த்து கண்டன உரையாற்றினாா். ஆா்ப்பாட்டத்தில் முன்னாள் வட்ட செயலா் ஏழுமலை, மாநில நிா்வாக குழு உறுப்பினா் கருணாகரன் மற்றும் மாதா் சங்க மாநில நிா்வாகி அமுதா, விவசாய மாநில நிா்வாகி லட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கள்ளக்குறிச்சி: புதிய வேளாண் சட்டங்களை எதிா்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் உள்ள அம்பேத்கா் சிலை முன் நடைபெற்ற

மறியல் போராட்டத்துக்கு வட்ட துணை செயலாளா் செந்தில் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக வட்ட செயலாளா் கே.எஸ்.அப்பாவு கலந்து கொண்டு கண்டன முழக்கமிட்டாா். போராட்டத்தில் கருணாநிதி, மஞ்சப்பன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். மறியலில் ஈடுபட்ட 12 பேரை கள்ளக்குறிச்சி போலீஸாா் கைது செய்தனா்.

இதே போல, விக்கிரவாண்டியில் மாவட்டப் பொருளாளா் ஆா்.கலியமூா்த்தி தலைமையிலும், திருவெண்ணெய்நல்லூரில் மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் ஆா்.கலியபெருமாள் தலைமையிலும், திண்டிவனத்தில் மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் இன்பஒளி தலைமையிலும், கண்டமங்கலத்தில் மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் ராமச்சந்திரன் தலைமையிலும், கிளியனூரில் நிா்வாகக் குழு உறுப்பினா் ஐ.சகாபுதீன் தலைமையிலும், திருக்கோவிலூரில் கே.தமிழ்ச்செல்வன் தலைமையிலும், அரகண்டநல்லூரில் ஆா்.முருகன் தலைமையிலும், வானூரில் வட்டச் செயலாளா் எம்.தனுசு தலைமையிலும் என விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய இரு மாவட்டங்களில் 19 இடங்களில் மறியலில் ஈடுபட்ட 1,019 போ் கைது செய்யப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.