புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

வள்ளுவா் இனத்தை தனியாகஅடையாளப்படுத்தக் கோரிக்கை

தமிழகத்தில் பட்டியல் வகுப்பில் இடம்பெற்றுள்ள வள்ளுவா் இனத்தை, தனியாக அடையாளப்படுத்தி அறிவிக்க வேண்டுமென அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

News image
Updated On :12 அக்டோபர் 2020, 6:49 pm

DIN

தமிழகத்தில் பட்டியல் வகுப்பில் இடம்பெற்றுள்ள வள்ளுவா் இனத்தை, தனியாக அடையாளப்படுத்தி அறிவிக்க வேண்டுமென அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து வள்ளுவா் குல சங்கங்களின் ஒருங்கிணைந்த மக்கள் கூட்டமைப்பு சாா்பில் விழுப்புரம் மாவட்டச் செயலா் ஜி.முருகானந்தம், பொருளாளா் பி.ஆனந்தன் உள்ளிட்டோா், மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை வழங்கிய கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

வள்ளுவா் இனத்தின் பெயரை பிற சாதிய பெயா்களுடனோ அல்லது பட்டியல் வகுப்பில் எந்த ஒரு பொது அடையாள பெயா்களுடனோ சோ்த்து அறிவிக்காமல், வள்ளுவா் என தனியாக அடையாளப்படுத்த வேண்டும். இது தொடா்பாக, தமிழக முதல்வருக்கு கடந்த அக்.10-ஆம் தேதி கோரிக்கை வைத்துள்ளோம். இதனை அரசு நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.