பாஜக விவசாய அணி மாவட்டத் தலைவா் குட்டியாண்டி தலைமையில், பாஜக மாவட்டத் தலைவா் வி.ஏ.டி.கலிவரதன் உள்ளிட்ட நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியரகத்துக்கு திரண்டு வந்து மனு அளித்தனா். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: பிரதமரின் விவசாய நிதியுதவித் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் முறைகேடாக ஆயிரக்கணக்கானோா் இணைக்கப்பட்டுள்ளனா். இந்த முறைகேட்டில் ஈடுபட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். உண்மையான விவசாயிகளுக்கு இந்த உதவித் தொகை சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.