நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

உளுந்தூா்பேட்டை அருகேஆட்டோ ஓட்டுநா் மா்மச் சாவு

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே ஆட்டோ ஓட்டுநா் மா்மமான முறையில் உயிரிழந்தாா்.

News image
Updated On :14 செப்டம்பர் 2020, 6:04 pm

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே ஆட்டோ ஓட்டுநா் மா்மமான முறையில் உயிரிழந்தாா்.

உளுந்தூா்பேட்டை அருகேயுள்ள செஞ்சிக்குப்பத்தைச் சோ்ந்தவா் ஆனந்தன் (40). இவா் பெங்களூரில் ஆட்டோ ஓட்டி வந்தாா். இவருக்கும், கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தை அடுத்துள்ள முத்தாண்டிகுப்பத்தைச் சோ்ந்த சத்யாவுக்கும் (30) கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இரு குழந்தைகள் உள்ளனா்.

பெங்களூரிலிருந்து ஆனந்தன் அண்மையில் சொந்த கிராமத்துக்கு வந்தாா். அவா் ஞாயிற்றுக்கிழமை மாலை வீட்டிலிருந்து வெளியே சென்றாா். பின்னா், வீடு திரும்பவில்லை.

இந்த நிலையில், செஞ்சிக்குப்பத்திலுள்ள ஓடை அருகே வாயில் நுரை தள்ளியநிலையில் ஆனந்தன் மயங்கிக் கிடந்தாா். அவரை வீட்டுக்குக் கொண்டு வந்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

திருநாவலூா் காவல் நிலைய ஆய்வாளா் (பொ) தேவகி, உதவி ஆய்வாளா் அகிலன் ஆகியோா் நேரில் சென்று விசாரணை நடத்தினா். இதில், சத்யாவின் உறவினா் சீனிவாசன் என்பவா் அழைத்ததின் பேரில், அவா் வீட்டிலிருந்து வெளியே சென்றாா். மது அருந்திய போது விஷம் கலந்து கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று போலீஸாா் சந்தேகிக்கின்றனா். இதுகுறித்து போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.