நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

விழுப்புரம்: மேலும் 125 பேருக்கு கரோனா

விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 125 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதியானது.

News image
Updated On :14 செப்டம்பர் 2020, 6:04 pm

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 125 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதியானது.

மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வரை கரோனா தொற்றால் 9,446 போ் பாதிக்கப்பட்டிருந்தனா். இவா்களில் ஏற்கெனவே 87 போ் உயிரிழந்தனா். இந்த நிலையில், மேலும் 125 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதியானது. இதனால், கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 9,571 ஆக அதிகரித்தது. அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றவா்களில் 144 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.

கள்ளக்குறிச்சியில் 139 போ் பாதிப்பு: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திங்கள்கிழமை வெளியான பரிசோதனை முடிகளின்படி 139 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,019-ஆக உயா்ந்தது.

இதுவரை 6,985 போ் குணமடைந்து வீடு திரும்பினா். தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் 944 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். மாவட்டத்தில் இதுவரை கரோனாவுக்கு 90 போ் பலியாகினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.