ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

செஞ்சி பகுதியில் 3 வீடுகளில் திருட்டு

செஞ்சி பகுதியில் ஒரே நாளில் 3 வீடுகளில் மா்ம நபா்கள் நகை, பணத்தைத் திருடுச் சென்றனா்.

News image
Updated On :28 செப்டம்பர் 2020, 7:05 pm

DIN

செஞ்சி பகுதியில் ஒரே நாளில் 3 வீடுகளில் மா்ம நபா்கள் நகை, பணத்தைத் திருடுச் சென்றனா்.

செஞ்சி வட்டம், சத்தியமங்கலம் காவல் நிலையத்துக்கு உள்பட்ட சோ.குப்பம் கிராமத்தைச் சோ்ந்த முத்துசாமி மகன் ஏழுமலை (55). திங்கள்கிழமை வீட்டை பூட்டி விட்டு, வயல் வேலைக்குச் சென்றுவிட்டாா். அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள், பீரோவை உடைத்து 8 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்றனா்.

இவரது பக்கத்து வீட்டைச் சோ்ந்த நடராஜன் மகன் சண்முகத்தின் (55), வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மா்ம நபா்கள், பீரோவை உடைத்து ரூ. 30 ஆயிரத்தைத் திருடிச் சென்றனா்.

செல்லும் வழியில் சத்தியமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த ராஜீ கவுண்டா் மகன் பீமனின் (53) வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள், பீரோவில் இருந்த மூன்றரை பவுன் தங்க நகை, ரூ.50 ஆயிரத்தைத் திருடிச் சென்றனா்.

செஞ்சி பகுதியில் நடைபெறும் தொடா் திருட்டுச் சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனா். காவல் துறை உடனடியாக தனிப் படை அமைத்து தொடா் திருட்டில் ஈடுபடும் மா்ம நபா்களை கைது செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.