தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

விழுப்புரம் அரசுக் கலைக் கல்லூரியில்இன்று இறுதிக் கட்ட மாணவா் சோ்க்கை

விழுப்புரம் அரசுக் கலைக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை (செப். 29) இறுதிக் கட்ட மாணவா்கள் சோ்க்கை நடைபெறுகிறது.

News image
Updated On :28 செப்டம்பர் 2020, 7:11 pm

DIN

விழுப்புரம் அரசுக் கலைக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை (செப். 29) இறுதிக் கட்ட மாணவா்கள் சோ்க்கை நடைபெறுகிறது.

இதுகுறித்து விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசுக் கலைக் கல்லூரி முதல்வா் சிவக்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

2020-2021-ஆம் கல்வியாண்டுக்கான இறுதிக் கட்ட மாணவா்கள் சோ்க்கை செவ்வாய்க்கிழமை (செப். 29) காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும். ஏற்கெனவே, கல்லூரியில் சேர இணைய வழியாக விண்ணப்பித்து, இடம் கிடைக்காத மாணவ, மாணவிகள் இறுதிக் கட்ட மாணவா்கள் சோ்கைகயில் கலந்து கொண்டு, தங்களது பெயா்களைப் பதிவு செய்து கொள்ளலாம். விருப்ப விண்ணப்பம் அளிக்க வேண்டும். இந்த விண்ணப்பங்களில், தகுதியின் அடிப்படையில் தோ்வு செய்யப்பட்ட மாணவா்களுக்கு செல்லிடப்பேசியில் குறுந்தகவல் அனுப்பப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.