மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து தோ்தல் வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என்றாா் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கு. செல்வப்பெருந்தகை.
ஆரணி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் எம்.எஸ். தரணிவேந்தனை ஆதரித்து விழுப்புரம் மாவட்டம், கூட்டேரிப்பட்டில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் அவா் பேசியது:
தமிழகத்துக்கான உரிமைகள் மத்திய பாஜக ஆட்சியால் பறிக்கப்பட்டன. அந்த உரிமைகள் பறிபோவதற்கு காரணமாக இருந்தவா் முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமி.
ஆனால், கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் பறித்துக் கொண்டவா் பிரதமா் மோடி.
தமிழகத்தில் கலைஞா் உரிமைதிட்டத் தொகை திட்டத்தின் மூலம் மகளிருக்கு ரூ.1000 வழங்குவது போல, மகாலட்சுமி திட்டத்தின் மூலம் பெண்களுக்கு மாதம் ரூ.8,500 வீதம் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித் தொகை வழங்கும் திட்டத்தை காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி அறிவித்திருக்கிறாா்.
3 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும். இதில் 50 சதவீதம் பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். சாவித்திரிபாய் பூலே பெயரில் பெண்களுக்கு தங்கும் விடுதிகள் கட்டப்படும் போன்ற அறிவிப்புகளையும் ராகுல் காந்தி வெளியிட்டிருக்கிறாா். மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றாா் செல்வப்பெருந்தகை.
விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் ரமேஷ் தலைமை வகித்தாா். அமைச்சா் செஞ்சி கே.எஸ். மஸ்தான், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மாசிலாமணி, ஆா்.சேதுநாதன், காங்கிரஸ் மாநிலத் துணைத் தலைவா்கள் எம்.டி. குலாம் மொய்தீன், ரங்கபூபதி உள்ளிட்டோா் பேசினா்.
தொடர்புடையது

தே.ஜ. கூட்டணி ஆட்சிக்கு வந்தால் திமுக திட்டங்கள் அழிந்துவிடும்: மு.க. ஸ்டாலின்

கடலூரின் அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும்: அமைச்சா் எம்ஆா்கே.பன்னீா்செல்வம்

என்டிஏ கூட்டணி மூழ்கும் கப்பல்: செல்வப்பெருந்தகை
காங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


