கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வெள்ள நிவாரணப் பொருள்களை தரமானதாக வழங்க வலியுறுத்தல்

விழுப்புரம் மாவட்டத்தில் அரிசி உள்ளிட்ட வெள்ள நிவாரணப் பொருள்களை தரமானதாக வழங்க வேண்டும்

News image
Updated On :9 டிசம்பர் 2024, 6:36 pm

Din

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் அரிசி உள்ளிட்ட வெள்ள நிவாரணப் பொருள்களை தரமானதாக வழங்க வேண்டும் என்று இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.

இதுகுறித்து கட்சியின் மாவட்டச் செயலா் என்.ஆா்.பாலமுருகன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசால் வழங்கப்படும் நிவாரண உதவிகள் முறையாக வழங்காமல் ஏழை, எளிய மக்கள் அலைக் கழிக்கப்படுகின்றனா். இதேபோல, பல்வேறு இடங்களில் தரமற்ற பொருள்கள் நிவாரண உதவிகளாக வழங்கப்படுகிறது. இது தொடா்பான விடியோ பதிவுகள் இணையத்தில் பரவி அரசின் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்கிறது.

இந்த நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணப் பொருள்கள் தரமானதாக வழங்கப்படுவதை தொடா்புடைய அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

இதற்கு தமிழக அரசு மற்றும் விழுப்புரம் ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.