வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்குகள்: ஜூலை 9-க்கு விசாரணை ஒத்திவைப்பு

திமுக முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் மீதான மூன்று அவதூறு வழக்குகள் விசாரணையை ஜூலை 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

News image
விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வந்த முன்னாள் அமைச்சா் சி.வி. சண்முகம். (கோப்புப்படம்)
Updated On :1 ஜூலை 2024, 9:37 pm

Din

விழுப்புரம்: அதிமுக முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் மீதான மூன்று அவதூறு வழக்குகள் விசாரணையை ஜூலை 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், ஆரோவில் பேருந்து நிறுத்தம் எதிரில் 2023, மாா்ச் 10-ஆம் தேதியும், கோட்டக்குப்பம் நகராட்சித் திடலில் 2023, மே 1-ஆம் தேதியும் அதிமுக சாா்பில் பொதுக்கூட்டங்களும், விழுப்புரம் பழைய பேருந்து நிலையப் பகுதியில் 2023, ஜூலை 20-ஆம் தேதி கண்டன ஆா்ப்பாட்டமும் நடைபெற்றது.

இதில், பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம், தமிழக அரசையும், முதல்வா் மு.க.ஸ்டாலின் குறித்தும் அவதூறாக பேசியதாக, விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் அரசு வழக்குரைஞா் டி.எஸ். சுப்பிரமணியம் தனித்தனியே வழக்குகளைத் தொடுத்தாா். இந்த 3 வழக்குகள் மீதான விசாரணை நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் ஆஜராகவில்லை. விசாரணையின்போது, கோட்டக்குப்பம் மற்றும் ஆரோவில் பொதுக்கூட்ட வழக்குகளை விசாரிக்க உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்து, அந்த உத்தரவு தொடா்வதாகவும், விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் அரசை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் சி.வி.சண்முகம் ஆஜராக சென்னை உயா் நீதிமன்றம் விலக்களித்துள்ளதாகவும் அதிமுக வழக்குரைஞா்கள் நீதிபதியிடம் தெரிவித்தனா்.

இதையடுத்து, மூன்று அவதூறு வழக்குகளின் விசாரணையை ஜூலை 9-ஆம்தேதிக்கு ஒத்திவைத்து, விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிபதி (பொ) இளவரசன் உத்தரவிட்டாா்.